நமக்கு எத்தனை ஆயிரம் கடவுள்கள்? அவர்களின் செயல்களை எழுத வேண்டுமென்று ஆரம்பித்தால் மைதான் தீர்ந்துவிடுமே தவிரப் பெயர்கள் முடிவடையுமா? அதற்கெல்லாம் என்ன ஆதாரம்? யாராவது ஒரு பார்ப்பானைக் கேளுங்கள். எப்படி அந்தக் கடவுள்கள் ஏற்பட்டன? எப்போது, எங்கே, என்று? நாங்கள் தலையெடுத்து இதையெல்லாம் கேட்காமல் விட்டிருந்தால் மைல் கற்கள், பர்லாங்கு கற்கள் எல்லாம் கடவுள்களாகி இருக்குமே; படுத்திருக்கின்ற அம்மிக்கல்லை எடுத்து நிறுத்தி வைத்துக் குங்குமம், மஞ்சள் பூதி விட்டால் அதுவும் ஒரு கடவுள். கோடிக் கணக்கிலா நமக்குக் கடவுள்கள் இருப்பது?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1947)
Leave a Comment

