திராவிட மாடல் ஆட்சியில் மீனவர்களுக்கு ஏராளமான திட்டங்கள் தி.மு.க. சார்பில் சாதனைப் பட்டியல் வெளியீடு

2 Min Read

சென்னை, ஏப்.16- திராவிட மாடல் ஆட்சியில் மீனவர்களுக்கு ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தி.மு.க. சார்பில் சாதனைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அச் சாதனைகளின் சில அம்சங்கள்:

சாதனைப் பட்டியல்

* இலங்கை கடற்படை கைப்பற்றி சேதமடைந்த 180 விசைப்படகுகளுக்கும், 25 நாட்டுப்படகுகளுக்கும் ரூ.12.76 கோடி நிவாரணத்தை முதலமைச்சர் வழங்கியுள்ளார். மீன் பிடிக்கச் சென்று காணாமல் போகும் மீனவர் குடும்பத்திற்கு அன்றாடம் வழங்கப்படும் இழப்பீடு ரூ.250-அய் ரூ.500 என உயர்த்தியுள்ளார்.

* மீன்பிடித் தடைக்கால நிவாரணம் ரூ.5,000 என்பதை ரூ.8,000 ஆக உயர்த்தியுள்ளார். இதனால் 8,76,032 மீனவக் குடும்பங்கள் பயன் அடைவார்கள். மீன்பிடி குறைவு கால நிவாரணம் ரூ.5,000 என்பதை ரூ.6,000 ஆக உயர்த்தியுள்ளார். இதனால் 9,13,394 மீனவ குடும்பங்கள் பயனடைவார்கள். கடல் மீனவர் சேமிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.304.61 கோடி நிவாரணம், இதனால் 10,17,226 மீனவர்கள் பயனடைவர். கடல் மீனவ மகளிர் சேமிப்புத் திட்டத்தில் ரூ.301.02 கோடி நிவாரணம். இதனால் 10,05,390 மீனவ மகளிர் பயன்பெறுவர்.

* கடலில் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போகும் மீனவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நாளொன்றுக்கான உதவித்தொகை ரூ.250 என்பது ரூ.350 ஆக உயர்த்தப்பட்டு ஒரு மீனவ குடும்பத்திற்கு மாதம் ஒன்றிற்கு ரூ.10,500 வீதம் வழங்கப்படுகிறது. இந்த நாளொன்றுக்கான உதவித்தொகை ரூ.350 என்பது ரூ.500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.ஸ்டாலின் அறிவித்தபடி, 2025-2026ஆம் ஆண்டு முதல் உயர்த்தி வழங்கப்படுகிறது.

* 1.6.2020 முதல் 18.10.2021 வரை மீனவர் காப்பீடு இல்லாத காலத்தில் மீன் பிடிக்கச் சென்று உயிர் இழந்த 205 மீனவர் குடும்பங்களுக்கு விபத்துக் காப்பீடு நிவாரணத் தொகை தலா ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் ரூ.4.10 கோடி வழங்கப்பட்டுள்ளது. நிரந்தர ஊனமடைந்த ஒரு மீனவருக்கு ரூ.1 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

* 5.12.2023 அன்று எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் கச்சா எண்ணெய் கலந்ததால் எண்ணூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்களின் சேதமடைந்த படகுகள், வலைகளுக்காக ரூ3.66 கோடி நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

* 4.12.2023 அன்று ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட மீனவர்களின் படகுகள் முதலியவற்றிற்கான வாடகைக் கட்டணம்; பணியில் ஈடுபட்டிருந்த மீனவர்களுக்கு செலவினம் என ரூ.1.70 கோடி வழங்கப்பட்டதுடன்; சேதமடைந்த மீன்பிடி படகுகளுக்காகவும் ரூ.12.88 கோடி நிவாரணம் வழங்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *