கருநாடக மாநிலம் பெங்களூருவில் ‘ஸ்பூர்த்திதம்மா’ எனும் அமைப்பினர் நடத்தும் ‘அம்பேத்கர் ஹப்பா 2026’ விழாவில், ‘ஸ்பூர்த்திதம்மா’ அமைப்பின் தலைவர் தலைமையில், எஸ்.மாரிசுவாமி, நாடொஜா குமர. வீரபத்திரப்பா அவர்கள், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு ‘போதி விருட்சம்’ விருதும், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினார். உடன் திரைப்பட நடிகரும், சமூகச் செயற்பாட்டாளருமான அசோக் உள்பட பல முக்கிய பொறுப்பாளர்கள் உள்ளனர். அதற்கு முன்பாக, அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான இன்று, அவரது படத்திற்கு மலர்தூவியும், புத்தர் சிலைக்கு மலர்தூவியும் தமிழர் தலைவர் ஆசிரியர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் மரியாதை செலுத்தினர் (14.4.2026).

