தா.பழூர், மார்ச் 19- திமுக வெல்லட்டும் திராவிட மாடல் தொடரட்டும்.. என்ற தலைப்பில் தா.பழூர் கடைவீதியில் தெருமுனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. 15.3.2026 ஞாயிறு மாலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்ற இக்கூட்டத்திற்கு ஒன்றிய துணைத் தலைவர் இராஜேந்திரன் தலைமையேற்க, ஒன்றியச் செயலாளர் பி.வெங்கடாசலம் வரவேற்புரையாற்றினார்.
மாவட்ட துணைத்தலைவர் இரா.திலீபன், ஒன்றிய துணைச் செயலாளர் சி. தமிழ் சேகரன், மாவட்ட வி.அ.தலைவர் மா.சங்கர், செயலாளர் ஆ.இளவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெரியார் பிஞ்சு தமிழ் நிலவன், மாவட்ட வழக்குரை ஞரணி அமைப்பாளர் மு.ராஜா, மாவட்டச் செயலாளர் மு.கோபாலகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் விடுதலை .நீலமேகன், தலைமை செயற்குழு உறுப்பினர் க.சிந்தனைச் செல்வன் ஆகியோர் உரையாற்றிய பின்னர் கழகப் பேச்சாளர் புலவர் வை. நாத்திக நம்பி சிறப்புரையாற்றினார். மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் வி.ஜி.மணிகண்டன் நன்றி கூறினார்.v
ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் தியாக. முருகன், அரியலூர் ஒன்றிய தலைவர் சி.சிவக்கொழுந்து, ஜெயங்கொண்டம் நகரத் தலைவர் துரை.பிரபாகரன், திட்டக்குடி அறிவு, செந்துறை ஒன்றிய தலைவர் மு.முத்தமிழ் செல்வன் , கீழப்பழுவூர் கே. எம் அன்பரசன் உள்ளிட்ட பொறுப்பாளர்களும் பொதுமக்களும்பங்கேற்றனர்.
