சேலம், ஜூன் 24- 4.7.2026 சனிக் கிழமை அன்று சேலம் மாநகரில் நடைபெற உள்ள திராவிடர் கழகத்தின் பொதுக்குழுவிற்கு ஆலோசனை வழங்கவும் நடைமுறைப்படுத்துவதற்கு உண்டான செயலாக்க திட்டத்தை வகுப்பதற்கும்
சேலம், மேட்டூர், ஆத்தூர், நாமக்கல், திருச்செங்கோடு, ஈரோடு, கோபி, தருமபுரி, அரூர் மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டம் 21-06-2026 அன்று இரவு பொதுச்செயலாளர் முனைவர் வீ.அன்புராஜ் தலைமையில் நடைபெற்றது.
சேலம் மாவட்டக் கழகத் தலைவர் வீரமணி ராஜு அனைவரையும் வர வேற்க சேலம் மாவட்டச் செயலாளர் மூணாங்கரடு பெ.சரவணன் ஒருங் கிணைத்தார்.
மேட்டூர் மாவட்ட கழகக் காப்பாளர்கள் பழனி புள்ளையண்ணன், சி. சுப்பிரமணியம், ஆத்தூர் மாவட்ட கழகக் காப்பாளர்கள் த. வானவில் விடுதலை சந்திரன், திருச்செங்கோடு மாவட்ட கழகக் காப்பாளர் அ.கு. குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் த. சண்முகம், ஈரோடு மாவட்ட கழக காப்பாளர் கு. சண்முகம், கோபி மாவட்ட கழக காப்பாளர் ந. சிவலிங்கம், மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, பகுத்தறிவாளர் கழக மாநில துணை பொதுச்செயலாளர் அண்ணா சரவணன், மாநிலப் பகுத்தறிவு கலைத்துறைச் செயலாளர் மாரி. கருணாநிதி மற்றும் மேட்டூர் கழக மாவட்டத் தலைவர் கா.நா. பாலு, மேட்டூர் மாவட்ட கழகச் செயலாளர் ப.கலைவாணன், ஆத்தூர் கழக மாவட்டத் தலைவர் அ. சுரேஷ், ஆத்தூர் கழக மாவட்டச் செயலாளர் நீ. சேகர், நாமக்கல் மாவட்ட கழகத் தலைவர் வை.பெரியசாமி, திருச்செங்கோடு மாவட்டக் கழகத் தலைவர் சு.சரவணன், திருச்செங்கோடு மாவட்ட கழகச் செயலாளர் ஆனந்தகுமார் கணேஷ், தர்மபுரி மாவட்டக் கழகத் தலைவர் பீம.தமிழ் பிரபாகரன், மாவட்டச் செயலாளர் மா. முனியப்பன், அரூர் மாவட்டக் கழகத் தலைவர் அ.தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமன் நோக்க உரை ஆற்றும் பொழுது பொதுக்குழு கூட்டத்திற்கு உண்டான செலவுகள் குறித்தும், மாவட்ட நிர்வாகங்கள் அதற்குண்டான நிதி அளிப்பவர்களை அடையாளப்படுத்த அதை பெறுவதற்காக அந்தந்த இடங் களுக்கு வருவோம் எனவும் கூறினார். தத்தம் நிதி உதவிகளையும் அறிவிக் கவும் வேண்டினார்.
பின்னர் மாவட்ட கழகங்களின் காப் பாளர்கள் தலைவர்கள் மாநில அளவிலான பொறுப்பாளர்கள் வழிகாட்டுதல் உரை ஆற்றினார்கள்.
பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தலைமை உரையாற்றும்போது பொதுக்குழு நடத்த தேவையான ஏற்பாடுகள் குறித்தும் அவைகளை நடைமுறைப்படுத்த தேவை யான நடவடிக்கைகள் குறித்தும் விளக்கி நெறிப்படுத்தினார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் குறிக்கோளான “1000 இளைஞர்களை உருவாக்குதல்” என்கிற செயலை நிறை வேற்ற வழிகளை வகுக்கக் கூறினார்.
பொதுக்குழுவிற்கு தத்தம் குடும்பங்க ளுடன் குழந்தைகளையும் அழைத்து வந்து, கலந்து கொள்ள வைத்து திராவிட, பகுத்தறிவு, உணர்வுகளையும் நெறிகளையும் அறியச் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
முன்னமே, பொதுச்செயலாளர் மாநில அளவிலான பொறுப்பாளர்களுக்கும் காப்பாளர்களுக்கும் மாவட்டத் தலைவர்கள் செயலாளர்கள் மற்றும் வந்திருந்த தோழர்கள் அனைவருக்கும் பயனாடை அணிவித்தார்.
குறிப்பாக நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முடித்து சிறையில் இருந்து வந்திருந்த மாநில மாணவர் கழகச் செயலாளர் இரா.செந்தூர பாண்டியன், மாநில மாணவர் கழக இணைச் செயலாளர் மு.இளமாறன், மாநில மாணவர் கழகத் துணைச் செயலாளர் தேவ. நர்மதா ஆகியோருக்கும் பாராட்டி பயனாடை அணிவித்தார்.
கூட்டத்தில் நிதியளித்தவர்கள்
பழனி புள்ளையண்ணன்- ரூ.10000/-
வீரமணி ராஜு- ரூ..25000/-
மூனாங்கரடு பெ.சரவணன் – ரூ.20000/-
சு. இமயவரம்பன்- ரூ.20000/-
தகடூர் தமிழ்ச்செல்வி- 5000/-
பீமா. தமிழ் பிரபாகரன் -ரூ.2000/-
முனைவர் ந. ராஜேந்திரன் ரூ.1000/-
வை. பெரியசாமி-5000/-
மொத்த நிதி அறிவிப்பு – ரூ. 88000/-
கூட்டத்தில் கலந்து கொண்ட
கழகத் தோழர்கள்
கழகத் தோழர்கள்
கோவி.அன்பு மதி, மெய்ஞான அருள், முனைவர் நா.ராஜேந்திரன், ஜெ.காளியப்பன், வ.முருகானந்தம், க.கமலம், கூ.செல்வம், பச்சையப்பன், ஆர்.ராஜேந்திரன், சோ.அசோகன், ஆர்.ரமேஷ், மு.சீனிவாசன், பி.மகேந்தர், எம்.தரண், த.மு.யாழ் திலீபன், அ.ச.இளவழகன், பெ.சவுந்தரராசன், இரா.ராஜேந்திரன், சத்தியமூர்த்தி, வீரன், இல.செல்வகுமார், வீர.முருகன், கு.ராஜு, ரா.த.பிரியா, அ.இ.தமிழர் தலைவர், வெ.மோகன், மா.செல்லதுரை, தி.அன்பரசு, காளியப்பன், இரா.மாயக் கண்ணன், கா.அருண் ஆகியோர் வருகை புரிந்து சிறப்பித்தனர்.
இறுதியாக பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.
