புதுடில்லி, மே. 24- தேசிய நெடுஞ் சாலைகளில் ஆக்கிரமிப்புகளை தடுக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
பொதுநல மனு
உச்ச நீதிமன்றத்தில் ஞான பிரகாஷ் என்பவர் ஒருபொது நல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், நெடுஞ்சாலை களில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், தேசிய நெடுஞ்சா லைகள் (நிலம் மற்றும் போக்குவரத்து) சட்டப் பிரிவுகளை அமல்படுத்தவும் உத்தரவிடக் கோரி இருந்தார்.
இவ்வழக்கில், நீதிமன்றத்திற்கு உதவ வழக்குரைஞர் சுவாதி கிடியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மசி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மனு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
தேசிய நெடுஞ்சாலை நிலங்களில் ஆக்கிரமிப்புகளை தடுக்க இந்திய தேசிய நெடுஞ் சாலை ஆணையம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய நெடுஞ்சா லைகளை பயன்படுத்துபவர்க ளுக்கு விரிவான தகவல்கள் அளிக்கவும், புகார்களுக்கு தீர்வு காணவும் ‘ராஜ்மார்க் யாத்ரா’ என்ற அலைபேசி செயலியை நெடுஞ்சாலை ஆணையம் அறிமுகம் செய் துள்ளது.
அலைபேசி செயலி
அந்த அலைபேசி செயலி இருப் பது குறித்து சுங்கச்சாவ டிகளிலும், நெடுஞ்சாலை உணவகங்களிலும் காட்சிப்ப டுத்தப்பட வேண்டும். பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்த வேண்டும்.
‘ராஜ்மார்க்யாத்ரா’ செயலி யில் பதிவு செய்யப்பட்ட பல்வேறு வகையான புகார்களின் விவரம், ஆக்கிரமிப்பு குறித்த புகார்கள், அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரம் ஆகியவை குறித்து நெடுஞ்சாலை இணை செயலாளர் அறிக்கை அளிக்க வேண்டும்.
கண்காணிப்புக் குழு
மேலும், தேசிய நெடுஞ் சாலை நிலங்களில் ஆக்கிரமிப்பு தொடர் பான புகார்களை தெரிவிக்க குறை தீர்ப்பு இணையதளம் தொடங்குவது பற்றிய உத்தரவுக்கு கீழ்ப்படிவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 3 மாதங்களுக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலைகளை ஆய்வு செய்ய குழுக்கள் அமைப்பது தொடர்பாக விரிவான விதிமுறை வகுக்குமாறு நெடுஞ்சாலை நிர்வாகத்துக்கு உத்தரவிடுகிறோம்.
அதுபோல், மாநில காவல்துறை மற்றும் இதர படைகள் அடங்கிய கண்காணிப்பு குழுக்கள் அமைக்குமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிடுகிறோம். அக்குழுக்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் நேரம் தவறாமல் ரோந்து செல்ல வேண்டும். இந்த உத்தரவை பின்பற்றுவதாக 3 மாதங்களுக்குள் ஒன்றிய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
செப்டம்பர் 15-ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.