தமிழ்நாடு, கேரள காங்கிரஸ் சார்பில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு நடைப்பயணம் கே.எஸ்.அழகிரி தொடங்கி வைக்கிறார்
சென்னை, மார்ச் 20-- தமிழ்நாடு, கேரள காங்கிரஸ் சார்பில், வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா நடைப்பயணம் ஈரோட்டில் வரும் 28-ஆம் தேதி தொடங்குகிறது.மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனின் 91-ஆவது பிறந்த நாள் விழா சத்யமூர்த்தி பவனில் நேற்று (19.3.2023) நடைபெற்றது.…
பன்னாட்டு தரத்தில் மதுரையில் 7 அடுக்கில் எண்ணற்ற வசதிகளுடன் கலைஞர் நூலகம்
மதுரை, மார்ச் 20 - தென் மாவட்டங்களின் தலைநகராம் மதுரைக்கு மணி மகுடமாக திகழ உள்ளது 7 தளங்கள், எண்ணற்ற நவீன வசதிகளுடன் உலக தரத்தில் உருவாகியுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நூலகம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரங்களால், வரும் ஜூன் மாதம்…
தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையாருக்கு கருஞ்சட்டையின் கடிதம்!
பா.ஜ.க.வின் தமிழ்நாடுத் தலைவர் அண்ணாமலை யாருக்கு கருஞ்சட்டை வணக்கம்!கருநாடக மாநிலத்தில் அய்.பி.எஸ். ஆக பணி புரிந்ததை விட்டுவிட்டு, (யார் தூண்டுதலோ அல்லது உங்களின் மனதின் குரலைக் கேட்டோ) பா.ஜ.க.வில் இணைந்து, லாட்டரி பம்பர் பரிசுபோல திடீரென ஒரே ‘அய்ட் ஜம்ப்பாக' நேரடி…
மனவிணையர் மணவிழா
நாள்: 25.3.2023 சனிக்கிழமை காலை 10 மணிஇடம்: நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றம் பெரியார் திடல், சென்னைமணமக்கள்: ஜோ.ஆட்லின் - இ.ப.இனநலம்மணவுரை மொழிதலும் நிகழ்த்தலும்: ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)நல்வரவு நல்குதல்: இறைவிசான்றோர் போற்றல்: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்)வீ.அன்புராஜ் (கழக…
நடக்க இருப்பவை
20.03.2023 திங்கள் கிழமைபுதுமை இலக்கியத் தென்றல்நிகழ்வு எண் 939சென்னை: மாலை 6.30 மணி அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) முன்னிலை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநிலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) வரவேற்புரை:…
நன்கொடை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தலைவர் முனைவர் வா.நேரு - நே.சொர்ணம் இணையர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் இணை ஏற்பு ஏற்ற 31ஆம் ஆண்டு தொடக்க நாள் (20.03.2023) மகிழ்வாக, விடுதலை நாளிதழ் வளர்ச்சிக்கு ரூ.1000 நன்கொடையாக அளிக்கப்பட்டது.- -…
‘பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை’ பெயர் ‘தினமணி’க்கு தெரியாதா?
18.3.2023 அன்று தினமணி நாளிதழின் பக்கம் 4இல் ‘ஈ.வெ.ரா. சாலையில் போக்குவரத்து மாற்றம்’ என்று தலைப்பிட்டுள்ள செய்தியில் பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை என்று குறிப்பிடுவதற்கு பதிலாக வெறுமனே ‘ஈ.வெ.ரா சாலை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.‘தினமணி’யில் ‘பெரியார் ஈ.வெ.ரா’ என்றும், ‘நெடுஞ்சாலை’ என்றும் குறிப்பிடுவதில்…
முனைவர் ந.க.மங்கள முருகேசன் மறைவுக்கு இரங்கல்
சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் முனைவர் ந.க.மங்கள முருகேசன் மறைவுக்கு இரங்கல்திராவிட இயக்க வரலாற்றுப் பேராசிரியர் முனைவர் ந.க.மங்கள முருகேசன் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம். திராவிட இயக்க வரலாற்றை ஆவணப்படுத்தும் பெரும்பணியில் மறைவுற்ற ந.க.மங்கள முருகேசன் அவர்களின் பங்களிப்பு…
பெரியார் விடுக்கும் வினா! (929)
பிள்ளைகளை எல்லாம் தவறாமல் பள்ளிக்கு அனுப்பி படிக்க வைப்பதுதான் உங்கள் நிலையை மாற்றிக் கொள்ளும் ஒரே வழி - அல்லவா? கல்வியறி வும் - சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மை யுமே தாழ்ந்து கிடப்பவர்களை உயர்த்துமா? உயர்த் தாதா? படிப்பை எடுத்துக்…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் கணிதத்துறை கருத்தரங்கம்
வல்லம். மார்ச் 19- இரண்டு நாள்கள் பன்னாட்டு கருத்தரங்கம் "கணிதம் பயன்பாட்டு பகுப்பாய்வு மற்றும் கணக்கீடு" என்ற தலைப்பில் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் கணிதத் துறை நடத்தியது. இதில் முனைவர் ச.புவனேஸ்வரி (தலைவர், கணிதத்துறை) வரவேற்புரை வழங்கினார்.…
