ஆசிரியர்கள் தமிழில்தான் கையொப்பமிட வேண்டும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு
சென்னை, ஜூலை 28 அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் அனைத்து இடங்களிலும் தங்கள் பெயர்களை எழுதும் போதும், கையெழுத்திடும் போதும் கண்டிப்பாக தமிழிலேயே கையெழுத்திட வேண்டும் என்று 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அரசாணையை பிறப்பித்தது.அந்த அரசாணையை…
மேட்டூர் அணையில் நீர்வரத்து விநாடிக்கு 10,232 கன அடியாக அதிகரிப்பு
மேட்டூர், ஜூலை 28 ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று (27.7.2023) விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக உயர்ந்த நீர்வரத்து, மாலையில் 17 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 10,232 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும்…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் அடுத்த கட்டம் ஆகஸ்ட் 1 முதல் விண்ணப்பம்
சென்னை, ஜூலை 28 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் நகர்ப்புற பகுதிகளுக்கு 2-ஆம் கட்ட பதிவுக்கான விண்ணப்பங்கள் ஆக.1-ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. இதையொட்டி, வரும் 30ஆ-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளும் திறந் திருக்கும் என்று…
செங்கல்பட்டில் 137 எக்டேர் பரப்பளவில் தாவரவியல் பூங்கா இங்கிலாந்து அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
சென்னை ஜூலை 28 செங்கல்பட்டு மாவட்டம், கடம்பூர் கிராமத்தில் 137 எக்டேர் பரப்பளவில் தாவரவியல் பூங்கா அமைப்பதற்காக தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு அரசாணை வெளியிட்டது. லண்டனில் உள்ள ராயல் தாவரவியல் பூங்காவுடன் இணைந்து செங்கல்பட்டு மாவட்டம் கடம்பூர் கிராமத்தில் ரூ.300 கோடியில்…
என்.எல்.சி. சுரங்க விரிவாக்கம் அறுவடை பயிர் நிலங்கள் பாதிப்பு 17 இடங்களில் பேருந்துகள் மீது கல்வீச்சு
கடலூர், ஜூலை 28 என்எல்சி இந்தியா நிறுவனம் கையகப்படுத்திய விவசாய விளை நிலங்களில் 2-ஆம் சுரங்க விரி வாக்கத்துக்காக வாய்க்கால் வெட்டும் பணி 2-வது நாளாக நேற்றும் நடந்தது. கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி 2ஆ-வது சுரங்க விரிவாக்க பணிக்காக பரவனாற்றுக்கு என்எல்சி…
இடது இதய மேலறை துணை உறுப்பு அடைப்பு தனியார் மருத்துவமனை சாதனை
சென்னை,ஜூலை 28 - இந்தியாவில் முதன்முறையாக சென்னை ஆழ்வார் பேட்டையிலுள்ள காவேரி மருத்துவ மனை, ‘எக்கோ வழிகாட்டலுடன் இதயத்திற்குள் லாம்ப்ரே இடது இதய மேலறை துணை உறுப்பு (LAA) அடைப்பு செயல்முறையை செய்து’ சாதனை படைத்துள்ளது. இடது இதய மேலறை துணை உறுப்பு…
ஒன்றிய அரசின் கல்வி நிலையங்களில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் இடைநிற்றல் அதிகரிப்பு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி குற்றச்சாட்டு
சென்னை, ஜூலை 28 ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள்மீது வன்கொடுமை நிகழ்த்தப்படுவதால் இடைநிற்றலும், தற்கொலைகளும் அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்திய தொழில்நுட்பக் கழகம், இந்திய மேலாண்மை கழகம்,…
கடந்த 5 ஆண்டுகளில் புதிய அய்அய்டி, அய்அய்எம் திறக்கப்படவில்லை நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு பதில்
புதுடில்லி,ஜூலை 28 - கடந்த 5 ஆண்டுகளில் புதிதாக அய்அய்டி, அய்அய்எம் எதுவும் திறக்கப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் பதில் அளித்து உள்ளார்.இதுதொடர்பாக காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் குமார் கேத்கார் எழுப்பிய கேள்வி வருமாறு:…
மணிப்பூரில் கள ஆய்வு செய்ய ‘இந்தியா’ கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மணிப்பூர் பயணம்
புதுடில்லி, ஜூலை 28 இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் நிலைமையை ஆய்வு செய்வதற்காக எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட் டணியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளையும் நாளை மறுதினமும் (ஜூலை 29, 30)அங்கு பயணம் மேற் கொள்கின்றனர்.இதுகுறித்து காங்கிரஸ், மக்களவை கொறடா மாணிக்கம்…
பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.சும் அதிகாரத்துக்காக நாட்டையே எரித்து விடும்: ராகுல் சாடல்
புதுடில்லி, ஜூலை 28 - பாஜக, ஆர்எஸ்எஸ் இரண்டும் அதிகாரத்துக்காக நாட்டையே எரித்து விடும் என காங்கிரசு கட்சியின் மேனாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். இளைஞர் காங் கிரஸ் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி மூலம் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது,…
