தமிழர் தலைவருக்கு வரவேற்பு
பெரம்பலூருக்கு வருகை தந்த தமிழர் தலைவரை தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளரும், ஒன்றிய மேனாள் அமைச்சருமான ஆ. இராசா பயனாடை அணிவித்து வரவேற்றார்.
‘ஆரிய மாடல்’ உத்தரப்பிரதேசம் – ‘திராவிட மாடல்’ தமிழ்நாடு
'ஆரிய மாடல்' உத்தரப்பிரதேசம் மாடுகளைப் பாதுகாக்க ரூ.3000 கோடி நிதி ஒதுக்கீடு 'திராவிட மாடல்' தமிழ்நாடு மகளிர் இலவசப் பேருந்து பயண திட்டத்துக்கு ரூ.3000 கோடி நிதி ஒதுக்கீடு
எச்சரிக்கை!
பிஜேபியின் ஜமீன்தார் கலாச்சாரத்திற்கு நாங்கள் முடிவு கட்டுவோம். அவர்கள் ஒன்றிய புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்து கிறார்கள். இத்தகைய அச்சுறுத்தலைக் கண்டு நாங்கள் அஞ்ச மாட்டோம். - திரிணாமுல் காங் கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டவிருப்பதாக கருநாடக அரசு கூறுவது சட்ட விரோதம்!
காவிரி மேலாண்மை ஆணைய ஒப்புதல் இல்லாமல் அணை கட்டுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை "காவிரி மேலாண்மை ஆணையத்தில் ஒப்புதல் பெறாமலேயே மேகதாது அணையைக் கட்ட கருநாடக மாநில அரசு முடிவெடுப்பது சட்ட விரோதம். -…
‘இந்தியா’ கூட்டணியில் தொடரும் ஆம் ஆத்மி மல்லிகார்ஜுன கார்கேவுடன் கெஜ்ரிவால் சந்திப்பு
புதுடில்லி,பிப்.20- ‘இந்தியா’ கூட் டணியில் ஆம் ஆத்மி கட்சி தொடர்வதை உறுதிப்படுத்தும் வகையில் டில்லியில் (18.2.2024) ஞாயிற்றுக் கிழமை மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலின் சந்திப்பு அமைந்தது. டில்லி லோதி எஸ்டேட்டில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநி லங்களவை உறுப்பினருமான…
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு தந்த ஆணைகள்!
ஒன்றிய பா.ஜ.க. அரசின் தேர்தல் பத்திரத் திட் டத்தை எதிர்த்து உச்சநீமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பு வருமாறு: தீர்ப்பு - ஆணைகள்! (A) தேர்தல் பத்திர திட்டமானது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் - 1951 பிரிவு 29…
ஊன்றிப் படித்து, உண்மையை ஊரறியப் பரப்புங்கள்!
ஆளும் பா.ஜ.க.வுக்குச் சாதகமான ஒரு சார்பு பணந்திரட்டும் சட்டம்! வெளிப்படைத்தன்மையற்றதும் - ஜனநாயகத்துக்கு விரோதமானதுமான தேர்தல் பத்திரச் சட்டம் செல்லாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது! மறுசீராய்வு உள்ளிட்ட முறையில் ‘புதிய முயற்சிகள்' எடுக்க ஒன்றிய பி.ஜே.பி. அரசு முயன்றால், தக்க…
வரும் 24 ஆம் தேதி நியாய நடைப்பயணம் பிரியங்கா காந்தி பங்கேற்பு
புதுடில்லி, பிப். 20- வரும் 24ஆம் தேதி அன்று ராகுல் காந் தியின் நியாய நடைப் பயணத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்க உள்ளர். இந்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நாடாளுமன்ற மக்க ளவை தேர்தல் நடை பெறக் கூடும்…
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலிருந்து மாணவரை வெளியேற்றும் ஆணை ரத்து டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி,பிப்.20-- டில்லி ஜவகர்லால் நேரு பல் கலைக்கழகத்தில் மூலக் கூறு மருத்துவத் துறையில் ஆய்வு மாணவராக உள் ளார் தூத்துக்குடியைச் சேர்ந்தவர் நாசர். கடந்த ஆண்டு பிப்ர வரி மாதத்தில் பல்கலைக் கழக மாணவர் மன்ற அலுவலகத்தில் புகுந்து மாணவர்களைத் தாக்கி,…
செயற்கை நுண்ணறிவை (AI) எதிர்கொள்வது எப்படி? எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் கருத்தரங்கம்!
சென்னை. பிப், 20- எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், புத்தக விற்ப னையாளர்கள் கலந்து கொண்ட நிகழ்வில், ”செயற்கை நுண்ண றிவை எதிர்கொள்வது எப் படி?” என்பதற்கான ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. சென்னை கோட்டூர்புரத் தில் உள்ள அண்ணா நூற் றாண்டு நூலகத்தின்…
