கலைஞர் தனது கனவுகள் அனைத்தையும் தமிழ் நிலத்தில் விதைத்து நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பியாக மாறினார்
திறப்பு விழாவில் திரையிடப்பட்ட காட்சிப்பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை சென்னை, பிப்.27 - முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடம், அறிஞர் அண்ணா நினைவிடம் புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா நேற்று (26.2.2024) மாலை சென்னை கடற்கரை சாலையில் மெரினா கடற்கரையையொட்டி அமைந்துள்ள அறிஞர் அண்ணா,…
மோடி அரசின் கருத்துச் சுதந்திரம்?
இங்கிலாந்தில் உள்ள இந்திய வம்சாவளி பேராசிரியர் "மக்களாட்சியின் மாண்புகள்" குறித்த கருத்தரங்கில் கலந்துகொள்ள இந்தியா வந்தபோது விமான நிலைய அதிகாரிகளால் தடுக்கப்பட்டு மீண்டும் லண்டனுக்கு அனுப்பப்பட்டார். இந்திய வம்சாவழியைச் சேர்ந்த நிதாஷா கவுல் லண்டனில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் அரசியல் துறை…
500 மின்சாரப் பேருந்துகள் மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு
சென்னை, பிப். 27- 500 மின்சார பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்துக் கழகம் ஒப்பந்தப் புள்ளி கோரியுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 659 வழித்தடங்களில் 3,436 பேருந்துகள் நாள்தோறும் இயக்கப் படுகின்றன. 32 டிப்போக்கள் மூலம் கையாளப்படும் இந்த பேருந்துகளில்…
(ஓமலூர் வட்டம்) மூக்கனூர் பெருமாள் (ரெட்டியார்) மறைவு
கழகத் தலைவர் ஆசிரியர் இரங்கல் தி.மு.க.வின் தீவிர கொள்கை உணர்வாளரும், சீரிய பண்பாளரும், சிறந்த நட்பாளருமான மூக்கனூர் அய்யா திரு. பெருமாள் (ரெட்டியார்) (வயது 94) அவர்கள் இன்று (27.2.2024) காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் துயரப் படுகிறோம். இவர்…
மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் மீண்டும் தீவிரம் அரசுப் பேருந்து தீ வைத்து எரிப்பு!
ஊரடங்கு உத்தரவு; இணைய சேவை துண்டிப்பு மும்பை, பிப்.27- மராட்டியத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமூகத்தினர் நீண்ட காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 20.2.2024 சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்டி மாநில அரசு மராத்தாக்களுக்கு கல்வி,…
கழகத் தலைவர் ஆசிரியர் நிகழ்ச்சி
நாளை (28.2.2024) - புதன் காலை 10 - 12 மணி வரை வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா கிருஷ்ண மகால், பெண்ணாடம் மாலை 5 மணி சாக்கோட்டை - பகுத்தறிவு அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி கட்டட திறப்பு…
மக்களின் கருத்துகளை கேட்டறிந்து தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுத் தலைவர் கனிமொழி தகவல்
சென்னை,பிப்.27- பல்வேறு பகுதிகளுக் குச் சென்று மக்களை சந்தித்து அவர்களின் கருத்துகளை கேட்டறிந்து தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும் என்று தி.மு.க. மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார். தொகுதிப் பங்கீடு, தேர்தல் வியூகம் அமைத்தலுக்கான பணிகளை அதற்கென அமைக்கப்பட்ட குழுக்கள் மேற்கொண்டு…
சென்னை பல்கலைக்கழகத்தில் ஆய்வுச் சொற்பொழிவு பேராசிரியர் அ.கருணானந்தன் அறக்கட்டளை சொற்பொழிவு பவுத்தம் மற்றும் திராவிடவியல் ஆய்வு (2023-2024)
நாள்: 28.2.2024 காலை 10 மணி - இடம்: அறை எண் 48, கருத்தரங்க வளாகம், இந்திய வரலாற்றுத்துறை, சென்னை பல்கலைக்கழகம் தலைப்பு: How is Ashoka the Great great? பேரரசர் அசோகர் மாபெரும் பெருமைக்குரியவர்-எப்படி? உரையாற்றுபவர்: ஜி.பாலச்சந்திரன், அய்.ஏ.எஸ்.,…
மூன்றாம் ஆண்டு திருப்பத்தூர் புத்தகத் திருவிழா- 2024
இன்று (27.02.2024 முதல் 07.03.2024 வரை) திருப்பத்தூர் மாவட்ட பொது நூலகத்துறை நிர்வாகம், மற்றும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் மூன்றாம் ஆண்டு திருப்பத்தூர் புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு…
