பா.ஜ.க. பேணும் ஒழுக்கம்? கூட்டுப் பாலியல் வன்கொடுமை: பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் உள்பட 16 பேர் மீது வழக்குப்பதிவு!
லக்னோ, டிச.22 உத்தரப் பிரதேசத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் மோசடி வழக்கில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் உள்பட 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் பதான் நகரில் உள்ள கிராமத்தில் வசிக்கும் ஒருவரை நில விவகாரத்தில் கிராம…
மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டம், இதர வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி : அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்
ஜெய்ப்பூர்,டிச.22 ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நேற்று (21.12.2024) நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் 55ஆவது கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றார். இதுகுறித்து மேலும் அவர் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; “ஒன்றிய அரசின் வரவு – செலவு திட்டத்திற்கான முன்னோட்டம் குறித்து…
ரூ.1,338 கோடி மதிப்பில் ராணிப்பேட்டைக்கு வரும் முக்கிய திட்டம்!
ராணிப்பேட்டை,டிச.22- தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை முதல் ஆந்திரா எல்லை வரையிலான 4 வழிச்சாலை அமைக்க ஒன்றிய அரசு இப்போது ரூ.1,338 கோடி ஒதுக்கியுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 40இன் ஒரு பகுதியாக அமையும் இந்த திட்டம் அப்பகுதிக்கு முக்கிய பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு வரும்…
அம்பேத்கரின் புகழுக்கு களங்கம் கற்பிக்க முயற்சிப்பதா?
அமித்ஷாவுக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் கண்டனம் திருப்பூர், டிச.22- நாடாளு மன்றத்தில் அம்பேத்கர் குறித்து ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேசியதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சி.பி. ராதாகிருஷ்ணனும் கண்டனம் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. சி.பி.ராதாகிருஷ்ணன் ஆளுநராக இருந்தாலும் பாஜகவின் மூத்த…
ஊரக உள்ளாட்சிகளுக்கு உடனடித் தேர்தல் இல்லை!
சென்னை, டிச.22- நாடாளுமன்றம், சட்டமன்றம் போன்று உள்ளாட்சி அமைப்புகளுக்கும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்த வேண்டும். உள்ளாட்சியில் மக்கள் பிரதிநிதிகள் இருந்தால் தான் ஒன்றிய அரசும், அதற்கான மானியங்களை விடுவிக்கும். அதேபோல் மக்களுடைய அடிப்படை பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். தமிழ்நாட்டில்…
மேனாள் முப்படைத் தளபதி ஹெலிகாப்டர் விபத்தில் பலி: மனிதத் தவறே காரணம்!
நாடாளுமன்றத்தில் பாதுகாப்புக்குழு அறிக்கை புதுடில்லி, டிச.22- முப்படைகளின் மேனாள் தளபதி விபின் ராவத் பயணம் மேற்கொண்ட ஹெலிகாப்டர் விபக்குள்ளான நிகழ்வு குறித்து மக்களவையில் பாதுகாப்புத்துறை நிலைக்குழு 19.12.2024 அன்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது. கடந்த 2021 டிசம்பர் 8-ஆம் தேதி கோவை…
குமரியில் சிலை அமைத்து 25 ஆண்டுகள் நிறைவு
திருவள்ளுவர் சிலையை பேரறிவுச் சிலையாகக் கொண்டாடுவோம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் சென்னை, டிச.22- கலைஞர் திருவள்ளுவருக்கு அமைத்த சிலையை பேரறிவுச் சிலையாக கொண்டாடுவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளனர். திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவர்…
சேலம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
23.12.2024 திங்கள் கிழமை சேலம்: மாலை 5 மணி இடம்: மகிழ் இல்லம், 55/29, சவுண்டம்மன் கோயில் தெரு, அம்மாபேட்டை, சேலம் பொருள்: தலைமைக் கழகம் அறிவித்த படி, வைக்கம் வெற்றி முழக்கம் - டிசம்பர் 31 அன்று சேலத்தில் பொதுக்கூட்டம்…
48ஆவது சென்னை புத்தகக் காட்சி-2025 (27.12.2024 முதல் 12.01.2025 வரை)
தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) நடத்தும் 48ஆவது சென்னை புத்தகக் காட்சியில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: F-21 ஒதுக்கப்பட்டுள்ளது. கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி - கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் நமது…
நினைவு நாள் நன்கொடை
திராவிடர் கழக மேனாள் பொதுச் செயலாளர் "பெரியார் ஊழியன்" துரை.சக்ரவர்த்தி அவர்களின் 21ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி (24.12.2024) "விடுதலை" நாளேடு வளர்ச்சி நிதிக்கு ரூபாய் ஆயிரம் நன்கொடையாக பாணாவரம் மா.பெரியண்ணன் வழங்கியுள்ளார். நன்றி!
