சிந்து சமவெளி நாகரிகம்
அரியானாவில் உள்ள ராக்கிகார்கியில் ஹரப்பா நாகரிகத்தைச் சேர்ந்த பெண்ணின் உடலில் இருந்து கிடைத்த டி.என்.ஏ., தமிழ்நாட்டின் இருளர் பழங்குடியைச் சேர்ந்தவர்களின் டி.என்.ஏ.வுடன் ஒத்துப் போகிறது. குறிப்பு: சிந்து சமவெளி நாகரிகத்தில் மிகப் பெரிய நகரம் ராக்கி கார்கி.
இதுக்கும் எந்திரம் வந்தாச்சு!
இன்று மனிதர்கள் அன்றாடம் செய்யும் பல வேலைகளை எளிதாக்குவதற்கு தானியங்கி எந்திரங்கள் வந்துவிட்டன. அந்தவகையில், வித்தியாசமாக துணி தைப்பதற்கும் தானியங்கி தையல் எந்திரம் வந்துள்ளது. இதில், பெண் டிரைவ் பொருத்தி, நமக்கு விரும்பும் வடிவங்களை தேர்ந்தெடுக்கலாம். தேர்ந்தெடுக்கும் வடிவத்தை அப்படியே தத்ரூபமாக…
இடைத்தேர்தல்: அகிலேஷ் கண்டனம்
நாடு முழுவதும் 14 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி மாற்றப்பட்டதற்கு சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்தலில் தோல்வியைத் தவிர்ப்பதற்காக தேர்தல் தேதி மாற்றப்பட்டுள்ளதாகவும், அரசியலில் இது பழைய தந்திரம் எனவும் அவர் விமர்சித்துள்ளார். நவ.13இல் தேர்தல் நடைபெறுவதாக இருந்த…
தமிழர் தலைவர் ஆசிரியரின் பாராட்டும் – வரவேற்பும்!
தந்தை பெரியாரின் பெயரால் நூலகமும் – அறிவியல் மய்யமும் கோவையில் திறக்கப்படும் என்பதோடு மட்டுமல்லாமல், அதன் திறப்பு விழா தேதியையும் அறிவித்த சமூகநீதிக்கான சரித்திர நாயகர் நமது ‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சர் கோவையில் இன்று (6.11.2024) வெளியிட்ட அறி விப்பானது…
நிதியுதவி அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கேரளாவில் பாலக்காடு அருகே எக்ஸ்பிரஸ் ரயில் எதிர்பாராமல் மோதி ஏற்பட்ட விபத்தில், ரயில் பாதையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கு இரங்கல் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், முதலமைச்சரின்…
இந்நாள் – அந்நாள் (5.11.1889) பெரியார் பேணிய பல்கலைப்புலவர் கா.சுப்பிரமணிய பிள்ளை பிறந்த நாள்
திருநெல்வேலியில் காந்திமதிநாதப் பிள்ளை - மீனாட்சியம்மை இணையருக்கு மகனாகப் பிறந்தவர் கா.சுப்பிரமணியப் பிள்ளை. இவருடைய, தந்தை சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதன்முதலாக பி.ஏ. பட்டம் பெற்று, ‘பி.ஏ. பிள்ளை’ என்று அழைக்கப்பட்டவர். அவருடைய வாரிசாக உருவான கா.சு.பிள்ளை, தன்னுடைய ஆரம்பக் கல்வியை நெல்லையில்…
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் ஜார்க்கண்டில் பட்டினிச் சாவு நிகழும்-முதலமைச்சர் ஹேமந்த் சோரன்
சென்னை, நவ. 5- ஜார்க்கண்டில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பட்டினிச் சாவுகள் நிகழும் என்று அந்த மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தெரிவித்தார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரேஷன் கடைகளில் மாதம் 5…
திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோயிலுக்கு ஒன்றிய அரசு நோட்டீஸ்! உடனடியாக ரூ.1.57 கோடி ஜி.எஸ்.டி. கட்ட வேண்டுமாம்
திருவனந்தபுரம், நவ.5- மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே எல்லாப் பொருட்கள் மீதும் ஜி.எஸ்.டி வரியை விதித்து வருகிறது. இதனால் உணவு உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்து வருவது சாமானிய மக்களைப் பாதித்துள்ளது. தற்போது இந்தியா கடும் பொருளா…
ஆங்கிலத்தில் எழுதிய கடிதத்திற்கு ஹிந்தியில் பதில் அளிப்பதா? ஒன்றிய அமைச்சருக்கு கேரள எம்.பி., கண்டனம்
திருவனந்தபுரம், நவ.5- கேரள மாநிலத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ். இவர் ஆங்கிலத்தில் ஒன்றிய அமைச்சர ரவ்னீத் சிங் பிட்டு வுக்கு எழுதிய கடிதத்திற்கு ஹிந்தியில் பதிலளிப்பதா என்று ஒன்றிய அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்ததி லிருந்து ஒரே…
