மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிப்பு
மேட்டூா், டிச. 16- மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 9,500கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு 14.12.2025 அன்று காலை வினாடிக்கு 2514கன அடியிலிருந்து வினாடிக்கு 2326 கன…
தெற்கு ரயில்வேயின் பசுமைப் புரட்சி 2030-க்குள் முழு மின்மயமாக்கல் மற்றும் சோலார் ஆற்றல் சேமிப்பு!
சென்னை, டிச. 16- தெற்கு ரயில்வே 2030ஆம் ஆண்டுக்குள் முழுமையாக மின்மயமாக்கப்பட்ட ரயில் வலையமைப்பை உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் வேகமாகச் செயல்பட்டு வருகிறது. தற்போது, அதன் கட்டுப் பாட்டிலுள்ள 5,116 கி.மீ ரயில் பாதைகளில் 4,995 கி.மீ மின் மயமாக்கப்பட்டு,…
இல்லாததைக் கூறி அமளியில் இறங்கிய பா.ஜ.க. காங்கிரஸ் பேரணிக்குத் திரண்ட மக்கள் ஆதரவை திசைதிருப்பும் நடவடிக்கை! காங்கிரஸ் குற்றச்சாட்டு!
புதுடில்லி, டிச. 16- மோடிக்கு கல்லரை கட்டுவோம் என்று டில்லியில் காங்கிரஸ் நடத்திய கூட்டத்தில் முழக்கமிட்டதாக கூறிய பாஜகவினர் அமளியில் ஈடுபட்டனர். ஆனால் இதற்கான சான்றுகளை பாஜக தரப்பு தரவில்லை. பேரணி டில்லியில் வாக்குத்திருட்டு தொடர்பாக மாபெரும் பேரணி ஒன்றை காங்கிரஸ்…
நீதிமன்றத் தீர்ப்புக்கு தொழில்நுட்பம் துணை நிற்க வேண்டும் – தீர்ப்பு வழங்கக்கூடாது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த்
கட்டாக், டிச. 16- ஒடிசா மாநிலம் கட்டாக்கில் ‘சாமானியருக்கு நீதியை உறுதி செய்தல்: வழக்குச் செலவுகளைக் குறைப்பதற்கான ‘செயல் திட்டம்' என்ற தலைப்பில் 14.12.2025 அன்று நடைபெற்ற கருத்தரங்கில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்யகாந்த் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:…
பெண்கள் பாதுகாப்பு – சில கேள்விகளும், மாற்றுப் பார்வையும்!
- தரங்கிணி பெண்களின் பாதுகாப்பின் மேல் அக்கறை கொண்டவர்களின் கருத்து என்பது, பெரும்பாலும் மூன்று விசயங்களை சுற்றிதான் வருகிறது. பெண்கள் எந்நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டும், எப்பொழுதும் ஏதேனும் ஒரு ஆயுதத்தைப் பையில் வைத்திருக்க வேண்டும், தற்காப்புக் கலை தெரிந்து வைத்துக்…
இன்றைய பிரச்சினைகளுக்கு தீர்வை அன்றே சொன்ன பெரியார்
எனக்கு தந்தை பெரியாரை நேரடியாக தெரியாது. ஆனால் அவரைப் பற்றி நிறைய சொல்லிக் கொடுத்து அறிமுகப்படுத்தியவர் தான் என் அம்மா. அவர் அதை செய்திருக்கிறார் இதை செய்திருக்கிறார் என்பதை எல்லாம் என் அம்மா கூறியதை கடந்த நான்கு அய்ந்து ஆண்டுகளாக அவருடைய…
இந்நாள் – அந்நாள்
பனங்கன்டி ராம ராய நிங்கார் என்ற இயற்பெயர் கொண்ட பானகல் அரசர் நினைவு நாள் இன்று (16.12.1928). • • சிறீரங்கத்தில் தந்தை பெரியார் அவர்களின் வெண்கல சிலை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது (16.12.2006)
நவோதயா பள்ளிகளைத் தொடங்க ஒன்றிய அரசிடம் ஆலோசனை நடத்த வேண்டும்! தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, டிச.16- தமிழ்நாட்டில் ‘நவோதயா பள்ளி’களை தொடங்க அனுமதிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசின் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு நேற்று…
அரசு மருத்துவமனைகளில் ரேடியோகிராபர் பணிக்கு 67 காலி இடங்கள் ஜனவரி 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
சென்னை, டிச. 16- தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு மாநில மருத்துவ சார்நிலைப் பணியின் கீழ் வரும் ரேடியோகிராபர் (கதிர்வீச்சு நிபுணர்) பணியில் 67 காலி இடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. கல்வித்…
காற்று மாசுபாட்டால் மூச்சுத்திணறும் தலைநகரம் “வழக்கு விசாரணைக்கு நீதிமன்றம் வர வேண்டாம்!” வழக்குரைஞர்களுக்கு டில்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
புதுடில்லி, டிச. 16- டில்லியில் காற்று மாசு: காணொலி விசாரணைக்கு டில்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் செய்துள்ளது. டில்லியில் காற்றின் தரக் குறியீடு மிக மோசம் அடைந்துள்ள நிலையில், வழக்கு விசாரணைக் காக நீதிமன்றத்துக்கு நேரில் வருவதைத் தவிர்த்து, காணொலி விசாரணையைப்…
