கோவை, மார்ச் 30- கோவை யில் 6.4.-2024 அன்று இரவு 6 மணிக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் மேற் கொள்ளும் நாடாளுமன் றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பரப் புரை பொதுக்கூட்ட முன்னேற்பாட்டிற்காக 28-.3.-2024 வியாழன் 8.30 மணியளவில் தொழில் துறை அமைச்சர் டி.ஆர். பி.ராஜா அவர்களை திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக் குமார், மாநில இளைஞ ரணி செயலாளர் நாத்திக பொன்முடி, கோவை கழக மாவட்ட தலைவர் ம.சந்திரசேகரன், மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் ஆ.பிரபா கரன், கோவை தெற்கு பகுதி செயலாளர் கு.கும ரேசன். கழக பொறுப்பா ளர் இரா.முத்துக்கணே சன் ஆகியோர் கோவை யில் சந்தித்து பொதுக் கூட்டத்தை சிறப்பாக நடத்தவும், அதன் வழி முறைகளையும், எடுத்து ரைத்தனர். சிறப்பான முறையில் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளை செய்திடுவோம் என்று அமைச்சரும் உறுதியளித் தார். தமிழர் தலைவர் ஆசிரியர் தொலை பேசியில் நலம் விசாரித்து உரையாடினார்.