தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கான தொகுதிகளை ஒதுக்க வாக்காளர்கள், வேட்பாளர்கள் உரிமை கோர முடியாது

1 Min Read
- Advertisement -

உச்சநீதிமன்றம்

புதுடில்லி, நவ.20 தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு குறிப் பிட்ட தொகுதியை ஒதுக்கீடு செய்யுமாறு வாக்காளர்களோ, வேட்பாளர்களோ உரிமை கோர முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

கடந்த 1961ஆம் ஆண்டு இயற்றப் பட்ட மாவட்ட கவுன்சில் மற்றும் பஞ்சாயத்து யூனியன் சட்டத்தில் ஒன்றிய அரசு கடந்த 2025ஆம் ஆண்டு திருத்தம் கொண்டு வந்தது. இதன்படி, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கான சுழற்சி முறை இடஒதுக்கீடு என்பது, அடுத்த பொதுத்தேர்தலில் இருந்து புதிதாகத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து சிலர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். புதிய விதியால் முந்தைய சுழற்சி முறை அழிக்கப்பட்டு, இடஒதுக்கீடு கிடைக்க வேண்டிய பல தொகுதிகள் அந்த வாய்ப்பை இழந்துவிடும் என மனுதாரர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் ஆஜரான வழக்குரைஞர் விபின் சங்கி, ‘புதிய விதிகளை அறிமுகம் செய்வதால் மட்டுமே, தேர்தல் எல்லைகள் மாறினாலும் ஏற்ெகனவே இருந்த சுழற்சி முறையை முற்றிலும் புறக்கணிக்க முடியாது’ என்று வாதிட்டார். இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு 17.11.2026 அன்று விசாரித்தது. அப்போது நீதிபதிகள், ‘தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்காக தங்கள் தொகுதியை ஒதுக்கீடு செய்யுமாறு வாக்காளர்களுக்கோ, வேட்பாளர்களுக்கோ எந்த உரிமையும் கிடையாது. மாநிலத்தின் மக்கள் தொகை விகிதாச்சாரத்திற்கு ஏற்ப இடஒதுக்கீடு எண்ணிக்கை முறையாக உள்ளதா என்பதே முக்கியமாகும். இங்கு தேவை யான சதவீத இடங்கள் ஒதுக் கப்படவில்லை என யாரும் புகார் கூறவில்லை’ என கருத்து தெரிவித்தனர். மேலும், ‘திருத்தப் பட்ட விதிகள் அரசியலமைப்புச் சட்டத்தின் இடஒதுக்கீடு கொள் கைக்கு உட்பட்டே உள்ளது’ எனக் கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இருப்பினும், மனுதாரர்கள் தங்களது கோரிக்கை களைத் தகுந்த அதிகாரிகளிடம் முறையிடலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி வழக்கை முடித்து வைத்தது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *