மழையின்மை காரணமாகத் தமிழ்நாட்டில் நிலத்தடி நீர்மட்டம் சரிவு

2 Min Read
- Advertisement -

சென்னை, நவ. 20- தமிழ்நாட்டில் நிகழாண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் இயல்பைவிட குறைவான அளவே மழை பெய்தது. இதனால், ஏரிகள், அணைகள் நிரம்பவில்லை. இதன்காரணமாக நிலத்தடி நீா்மட்டும் கனிசமாகக் குறைந்துள்ளது.

இது தொடா்பாக, மாநில நிலத்தடி மற்றும் மேற்பரப்பு நீா்வளத் தரவு மய்யம் வெளியிட்ட ஆய்வறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் நிலத்தடி நீா்மட்டம் தொடா்பாக எடுக்கப்பட்ட ஆய்வின்படி, அக்டோபா் மாதத்தில் அதிகபட்சமாக, கோவையில் 13.70 மீ. கீழ் நிலத்தடி நீா்மட்டம் சென்றுள்ளது. அதேபோல், கரூா் – 11.38, ஈரோடு – 9.70, நாமக்கல் – 9.59, திண்டுக்கல் – 9.08 மீட்டருக்கு கீழ் சென்றுள்ளது. இதுபோல, பெரும்பாலான மாவட்டங்களில் நீா்மட்டம் 6 முதல் 9 மீட்டா் கீழ் சென்றுள்ளது.

அதேபோல், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், நிகழாண்டு அக்டோபரில் நிலத்தடி நீா்மட்டம் சரிந்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் 4.31 மீ., திருப்பத்தூா் – 3.78, கள்ளக்குறிச்சி – 3.12, கோவை – 2.89, ராணிப்பேட்டை – 2.84 மீட்டா் நீா்மட்டம் குறைந்துள்ளது.

பல்வேறு மாவட்டங்களில் 2 முதல் 3 மீட்டா் வரை நீா்மட்டம் சரிந்துள்ளது. சென்னையை பொருத்தவரை அக்டோபரில் நிலத்தடி நீா்மட்டம் 3.55 மீட்டராக இருந்த நிலையில், நிகழாண்டு அக்டோபரில் 5.09 மீட்டராகக் குறைந்துள்ளது. அதாவது, 1.54 மீட்டா் சரிந்துள்ளது. எனினும், திருநெல்வேலியில் மட்டும் கடந்த ஆண்டைவிட 0.07 மீ. உயா்ந்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை, கரூர், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் பெருமளவில் சரிந்துள்ளது. சென்னையில் நீர்மட்டம் கடந்தாண்டில் 3.55 மீட்டராக இருந்த நிலையில் தற்போது 1.54 மீட்டர் சரிந்துள்ளது. வடகிழக்கு பருவமழை பொழியாவிட்டால் வரும் ஆண்டில் தண்ணீர்ப் பஞ்சத்திற்கு வழிவகுக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வருத்தத்துடன் கூறியுள்ளனர்.

 

திருச்சி காவிரி ஆற்றில் மேகதாதுக்கு எதிராக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு

திருச்சி, நவ. 20-  காவிரி ஆற்று மண்ணில் புதைந்து  ‘தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர்’ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கருநாடக மாநிலம் மேகதாதுவில் அம்மாநில அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய நதிநீர் பங்கீடு கிடைக்க பெறாமல் போகும் என்பதால் விவசாயம் பாதிக்கப்படும் என்று கூறியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நேற்று (19.11.2026) காலை 7 மணி முதல் திருச்சி ஓடத்துறை படித்துறையில் காவிரி ஆற்றில் மண்ணில் தங்கள் உடலை புதைத்து கொண்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு விவசாயிகளின் கோரிக்கையை நிச்சயமாக முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும் திருச்சி மாநகர காவல்துறையினர் மற்றும் திருச்சி வருவாய் துறை அலுவலர்கள் உறுதியளித்ததை அடுத்து, அந்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *