சென்னை பக்கிங்காம் கால்வாயில் ‘வாட்டர் மெட்ரோ’ திட்ட அறிக்கை கேட்டு அறிவிப்பு வெளியீடு

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஆக. 14- சென்னை பக்கிங்காம் கால்வாயில் ‘வாட்டர் மெட்ரோ’ திட்டத்தை செயல் படுத்த சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க சென்னை மெட்ரோ ஒப்பந்தம் கோரியுள்ளது.

தமிழ்நாட்டில் ஆட்சி மாறி னாலும் தலைநகர் சென்னையை உலகத்தரத்திலான நகராக மாற்றும் வகையில், சாலை, கடல்வழி, மெட்ரோ, விமான போக்குவரத்து என பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. சென்னையின் போக்கு வரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக வாட்டர் மெட்ரோ திட்டத்தைத் தமிழ்நாடு அரசு முன்மொழிந்திருந்தது.

அதன்படி, சோழமண்டலக் கடற்கரைக்கு இணையாக ஓடும் தமிழ்நாடு மற்றும் ஆந்திரத்தை இணைக்கும் நீர்வழி பக்கிங்காம் கால்வாயில், வாட்டர் மெட்ரோ திட்டத்தை தமிழ்நாடு அரசு முன்னெடுத்திருக்கிறது.

ஆந்திரம் மற்றும் தமிழ்நாட்டின் கரையோரப் பகுதிகள் வழியாக 796 கி. மீட்டர் தூரத்துக்குப் பயணிக்கும் பங்கிங்காம் கால்வாய், தமிழ்நாட்டில் மட்டும் 160 கி.மீ. செல்கிறது. இந்தக் கால்வாய் தற்போது ஆக்கிரமிப்பு, கழிவு நீர் வெளியேற்றத்தாலும் மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்தித்து வருகிறது.

19 மற்றும் 20-ஆம் நூற்றாண்டு களில் ஒரு முதன்மையான நீர்வழியாக திகழ்ந்த பக்கிங் காம் கால்வாயில் அரை நூற்றாண்டுக்குப் பிறகு படகு போக்குவரத்தை மீண்டும் இயக்க சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம் திட்டமிட்டுள்ளது.

அண்மையில் தமிழ்நாடு அரசின் 2026-2027ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல் செய்வதை அரசு உறுதி செய்யும் என்று அறிவிக் கப்பட்டுள்ளதைப் போலவே, போக்குவரத்து துறையின் அடுத்த அத்தியாயம் எனக் கூறப்படும் வாட்டர் மெட்ரோ தமிழ்நாட்டின் பக்கிங்காம் கால்வாயை தூய்மைப்படுத்தி ‘வாட்டர் மெட்ரோ’ திட்டத்தை செயல்படுத்த சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க சென்னை மெட்ரோ டெண்டர் கோரியுள்ளது.

முதற்கட்டமாக, எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை 53 கி.மீக்கு படகுபோக்குவரத்து சேவை அமைக்க தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதைத்தொடர்ந்து, இதற்கான சாத்தியக்கூறு அறிக்கையைத் தயாரிக்க மெட்ரோ ரயில் நிறுவனம் தற்போது டெண்டர் வெளியிட்டுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு கேரளத்தின் கொச்சியில் சுமார் ரூ. 1,000 கோடி திட்ட மதிப்பீட்டில் வாட்டர் மெட்ரோ திட்டத்தை பிரதமர் மோடி திறந்து வைத் திருந்தார். இந்தியாவின் முதலா வது வாட்டர் மெட்ரோ திட்ட மான அது வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

மெட்ரோ ரயில் போன்றே குளிரூட்டப்பட்ட வசதி, தானியங்கி பயணச்சீட்டு வசதிகள் உள்ளன. கொச்சி வாட்டர் மெட்ரோவில் ரூ.20 வசூலிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் ஆகும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், வாட்டர் மெட்ரோவுக்கான எதிர் பார்ப்புகள் அதிகரித்திருக்கின்றன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *