காற்றுமாசு வரிசையில் உலக அளவில் மிகவும் மோசமான நகரங்களில் 100இல் 93 இந்திய நகரங்கள்

1 Min Read
- Advertisement -

புதுடில்லி, நவ. 14- உலகில் மாசுபட்ட நகரங் களின் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் முதல் 100 நகரங்களில் 93 நகரங்கள் இந்தியாவில் உள்ளது தெரியவந்துள்ளது. இதில் பெரும்பாலான நகரங்கள் வட இந்தியாவில் உள்ளன. முதல் 10 இடங்களில் பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேச மாநிலங்களின் நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

முதல் 10 இடங்களில் பாகிஸ்தானின் லாகூரை தவிர மற்ற 9 நகரங்களும் இந்தியாவைச் சேர்ந்தவை ஆகும். இந்த பட்டியலில் ராஜஸ்தானின் சிறீகங்கா நகர் முதல் இடத்தில் உள்ளது. தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தின் பரித்கோட், பதிண்டா, அரியானாவின் சிர்சா, பிவானி, உத்தர பிர தேசத்தின் புதோன், அரியானாவின் ஹிசார், அமிர்தசரஸ், பாகிஸ் தானின் லாகூர் மற்றும் உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் ஆகிய நகரங்கள் முதல் 10 இடங் களில் உள்ளன.

இந்த முதல் 10 இடங் களில் டில்லி இல்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும். டில்லி 15ஆவது இடத்தில் உள்ளது. தீபாவளிக்குப் பிறகு வட இந்திய மாநிலங்களில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு அறிக்கையில், தீபாவளி பண்டிகைக்கு பிறகு உலகின் மாசுபட்ட 100 நகரங்களில் 99 நகரங்கள் இந்தியாவில் இருப்பதாக ஒரு தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *