சோமாலியா அருகே கடத்தப்பட்ட மீனவர்கள் இந்திய கடற்படை மீட்பு

1 Min Read
- Advertisement -

மொகாதிசு, நவ. 4- சோமாலியா அருகே கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட மீனவர்களை இந்திய கடற்படையினர் அதிரடியாக மீட்டனர்.

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந் துள்ள நாடு சோமாலியா. இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள இந்நாட்டில் கடற்கொள்ளையர்கள் அதிக அளவில் உள்ளனர். இந்திய பெருங்கடல் வழியாக செல்லும் சரக்கு கப்பல்களை சிறை பிடித்து கடற்கொள்ளையர்கள் கொள்ளை யில் ஈடுபட்டு வருகின்றனர்.

சோமாலியாவின் பண்ட்லெண்ட் மாகாணம் தன்னாட்சி மாகாண மாக செயல்பட்டு வருகிறது. இந்த மாகாணத்தில் அதிக அளவில் கடற்கொள்ளை நிகழ்வுகள் அரங்கேறி வரு கின்றன. இதனிடையே, ஈரானை சேர்ந்த மீன்பிடி படகை கடந்த மாதம் சோமாலியாவை சேர்ந்த கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர். இந்த படகில் 20 மீனவர்கள் பயணம் செய்த நிலையில் அவர்களையும் கடற் கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர்.

இந்நிலையில், கடந்த மாதம் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட மீனவர்களை இந்திய கடற்படையினர் நேற்று (3.11.2026) அதிரடியாக மீட்டுள்ளனர். சோமாலியா அருகே இந்திய பொருங்கடல் பகுதியில், கடத்தப்பட்ட படகு இருப்பதை அறிந்த கடற்படையினர் போர்க்கப்பல்களில் விரைந்து சென்றனர். பின்னர், விமானப்படையின் சி-17 ரக விமானம் மூலம் கடற்படை கமாண் டோக்கள், கடத்தப்பட்ட படகில் அதிரடியாக இறங்கினர்.

பின்னர், அந்த படகில் இருந்த மீனவர்கள் 20 பேரையும் பத்திரமாக மீட்டனர். 48 மணி நேரமாக நடந்த மீட்புப்பணி வெற்றிகரமாக முடிந்துள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. மேலும், மீட்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் ஈரானை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *