அமெரிக்காவின் இஸ்ரேலுக்கான ராணுவ நிதி உதவி நிறுத்தம்! டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

- Advertisement -

வாசிங்டன், நவ.4-  இஸ்ரேல் நாட்டுக்கு அமெரிக்கா வழங்கி வரும் ஆண்டுக்கு 4 பில்லியன் டாலர் மதிப்பிலான நிதி உதவியை 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் முற்றிலும் நிறுத்த உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஒரு பேட்டியில் டிரம்ப் கூறும்போது, “இஸ்ரேலுக்கான நிதி உதவியை இந்த ஆண்டின் இறுதிக்குள் நிறுத்துவது குறித்து அந்த நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் ஆலோசனை நடத்தி ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இனி அமெரிக்கா இஸ்ரேலுக்கு நிதி வழங்கி உதவ வேண் டிய அவசியமில்லை. அவர்கள் தங்களுக்குத் தேவையான அமெரிக்க ராணுவத் தளவாடங்களை நேரடியாக விலைகொடுத்து வாங்கிக்கொள்ள முடியும். இருப்பினும், இஸ்ரேலுக்குத் தேவை ஏற்படும் பட்சத்தில் உதவிகள் வழங்கப்படும்” என்றார்.

மேலும், இந்த நிதி உதவி விவகாரம் குடி யரசுக் கட்சிக்கு எதிரான ஒரு முக்கியமான அரசியல் ஆயுதமாக ஜனநா யகக் கட்சியினரால் பயன் படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, மிச்சிகன் மாநில செனட் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் அப்துல் எல்-சயீத் போன்ற வர்கள், அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்கும் நிதி உதவியைக் கடுமையாக விமர்சித்துப் பிரச்சாரம் செய்து வருவதை டிரம்ப் சுட்டிக்காட்டினார். இதனால் குடியரசுக் கட்சியினர் வீண் அரசியல் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு கையெழுத்தான 10 ஆண்டுகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில், அமெ ரிக்கா ஆண்டிற்கு சுமார் 3.8 பில்லியன் டாலர் ராணுவ உதவியை இஸ்ரேலுக்கு வழங்கி வருகிறது. இந்த ஒப்பந்தம் வரும் 2028-ஆம் ஆண்டு முடிவடையும் நிலையில், அதற்கு முன்னதாகவே நிதி உதவியை நிறுத்துவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

2026 அமெரிக்க இடைத் தேர்தலில் பொருளாதாரம், வெளியுறவுக் கொள்கை மற்றும் இஸ்ரேலுக்கான ஆதரவு ஆகியவை முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், டிரம்பின் இந்த அறிவிப்பு பன்னாட்டு அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *