மோடி பிரதமர் ஆன பின்பு நாடு முழுவதும் முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கடும் வீழ்ச்சி

2 Min Read

புதுடில்லி, மே 8 2014ஆம் ஆண்டு மோடி பிரதமர் ஆனார். அதன்பிறகு நாட்டில் முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவம் பெரு மளவு குறைந்துள்ளது. மோடி பிரதமர் ஆவ தற்கு முன்பு, 2013ஆம் ஆண்டு முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 339ஆக இருந்தது. ஆனால், தற்போது 282 ஆகக் குறைந்துள்ளது.

பெரிய மாநிலங்களில் கடும் சரிவு

முஸ்லிம் மக்கள் தொகை அதிகமாக உள்ள பெரிய மாநிலங்களிலேயே இந்த வீழ்ச்சி மிகவும் அதிகமாக உள்ளது. நாட்டிலேயே அதிக சட்டமன்றத் தொகுதிகளை (403) கொண்ட உத்தரப்பிரதேசத்தில் முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 63-லிருந்து 31 என்ற அளவில் பாதியாகக் குறைந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தின் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 19% ஆகும். ஆனால், பிரதிநிதித்துவம் 8% மட்டுமே.

அதே போல மேற்கு வங்கத்தில் முஸ்லிம், சட்டமன்ற உறுப்பினர்களின்  எண்ணிக்கை 59 லிருந்து 37 ஆகக் குறைந்துள்ளது. அங்கு முஸ்லிம் மக்கள் தொகை 27% என்ற நிலையில், சட்டமன்ற உறுப்பினர்களின் பங்கு வெறும் 12.6% ஆகும். பீகாரில் 19 -லிருந்து 11 ஆகவும், ராஜஸ்தான் மாநிலத்தில் 11-லிருந்து 6 ஆகவும் குறைந்துள்ளது.

அசாம் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் முஸ்லிம்கள் இருந்தும், அங்கு 17% இடங்களை மட்டுமே முஸ்லிம்கள் கொண்டுள்ளனர். மகாராட்டிரா, கருநாடகா மாநிலங்களில் முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களின் பங்கு 4% மட்டுமே உள்ளது. இது அவர்களின் 10%-க்கும் அதிகமான மக்கள் தொகை விகிதத்தை விட மிகக் குறைவானது ஆகும்.

முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களே இல்லாத மாநிலங்களாக அருணாச்சலப் பிரதேசம், கோவா, இமாச்சலப் பிரதேசம், மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 7 மாநிலங்கள் உள்ளன. ஜம்மு-காஷ்மீரில் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தாலும், அங்கும் 58-லிருந்து 51 ஆகக் குறைந்துள்ளது.

எனினும், சில மாநிலங்களில் மட்டும்  சிறிய  உயர்வு காணப்படுகிறது. தமிழ்நாட்டில் முஸ்லிம் சட்டமன்ற உறுப்பி னர்களின் எண்ணிக்கை 8-லிருந்து 9 ஆக உயர்ந்துள்ளது. மத்தியப் பிரதேசம், மேகாலயாவிலும் சிறிய அளவிலான முன்னேற்றம் பதிவாகியுள்ளது.

முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகமுள்ள கட்சிகள்:

  1. காங்கிரஸ் – 61

2 தேசிய மாநாட்டுக் கட்சி – 39

  1. திரிணாமூல் காங்கிரஸ் – 34
  2. சமாஜ்வாதி – 34

1,807 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பா.ஜ.க.வில் தற்போது 2 முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். ஒருவர் மணிப்பூரைச் சேர்ந்த அசாப் உதின், மற்றொருவர் திரிபுராவைச் சேர்ந்த தபஜ்ஜல் ஹொசைன் ஆவர். இது பா.ஜ.க.வின் வகுப்புவாத அரசியலின் கொடூரம் என அரசியல் விமர்சகர்கள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *