கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 11.11.2026

2 Min Read
- Advertisement -

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* 1984 சீக்கியர் படுகொலைகள் இந்திய வரலாற்றின் துயரமான, வெட்கக்கேடான அத்தியாயம் – சோனியா காந்தி! 2,000-க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் கொல்லப்பட்ட அந்த கொடூர சம்பவத்திற்கு பிறகு, பழிவாங்கும் எண்ணம் வேண்டாம் என ராஜீவ் காந்தி மக்களைக் கேட்டுக் கொண்டதாக சோனியா நினைவு கூர்ந்தார். மேலும், நாடாளுமன்றத்தில் வாஜ்பாயுடன் நடந்த கடுமையான விவாதங்களையும் தனது நூலில் அவர் பதிவு செய்துள்ளார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸின் இரட்டை வியூகம்: ராகுல் களப்போராளி; பிரியங்கா வியூக வகுப்பாளர்! உத்தரப் பிரதேசத்தில் அகிலேஷ்ஷின் சமாஜ்வாதி கட்சியுடன் சுமுகமான கூட்டணியைத் தொடர்வதில் பிரியங்காவுக்கு முக்கியப் பொறுப்பு வழங்கப்படலாம். ராகுல் களத்தில் மக்களைச் சந்திக்கும் தலைவராகவும், பிரியங்கா அரசியல் வியூகங்களை வகுப்பவராகவும் செயல்படுவார்கள் என காங்கிரஸ் திட்டம் வகுப்பு.

தி இந்து:

* தேசிய பாதுகாப்பு ஏஜென்சி தலைவர் (NSA) அஜித் தோவல், முன்னாள் ’ரா’ (RAW) தலைவர் சமந்த் கோயல் மீது வழக்குத் தொடர அமெரிக்க நீதிமன்றம் அனுமதி! காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன், தன்னைப் படுகொலை செய்ய சதி செய்ததாகக் கூறி தொடர்ந்த வழக்கில், அஜித் தோவல் மற்றும் சமந்த் கோயலுக்கு இந்திய நீதித்துறை வழியாக நோட்டீஸ் அனுப்ப அமெரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்தியா இந்தக் குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றவை என நிராகரித்துள்ளது.

* தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு கோமா நிலையில் உள்ளது – மு.க. ஸ்டாலின் விமர்சனம்! தமிழ்நாட்டில் நிர்வாகத் தோல்வி காரணமாக சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். ஒரே நாளில் 17 கொலைகள், சட்டப்பேரவை துணைத் தலைவரின் மாண்பு அவமதிப்பு, மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமான குறுஞ்செய்தி என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தி டெலிகிராப்:

* 70 நாடுகளின் முற்போக்கு பிரதிநிதிகளுடன்  ‘ நமது உலகம் (‘OUR WORLD’) என்ற பன்னாட்டுச் சிந்தனைக் குழுவைத் தொடங்கும் காங்கிரஸ்! தெலுங்கானா அரசின் இரண்டாவது ’பாரத் உச்சி’ மாநாட்டில், உலகளாவிய முற்போக்கு மற்றும் தாராளவாத சிந்தனை குழுக்களை ஒருங்கிணைக்கும் அமைப்பு தொடங்கப்பட உள்ளது. செயற்கை நுண்ணறிவு, ஜனநாயகம், பொருளாதார நீதி, புவிசார் அரசியல் உள்ளிட்டவை குறித்து இதில் விவாதிக்கப்படும் என சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* திப்பு சுல்தான் நான்கு ஆங்கிலேயர்–மைசூர் போர்களை சந்தித்தார்; சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். பங்கேற்கவே இல்லை – கருநாடக அமைச்சர் பிரியங்க் கார்கே காட்டம். திப்பு சுல்தானின் வரலாற்றுப் பங்களிப்பை ஆதரித்துப் பேசிய அமைச்சர் பிரியங்க் கார்கே, இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்.-க்கு எந்தப் பங்கும் இல்லை என்று குற்றம்சாட்டினார். ஒத்துழையாமை இயக்கம், உப்புச் சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் உள்ளிட்ட எந்தப் போராட்டத்திலும் ஆர்.எஸ்.எஸ்.பங்கேற்கவில்லை ஆனால் இன்று அவர்கள்தான் மற்றவர்களுக்கு உத்தரவிடுகிறார்கள்!” என கண்டனம்.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *