டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* கருநாடக முதலமைச்சர் சித்தராமையா ஆளுநரின் செயலாளரிடம் பதவி விலகல் கடிதம் கொடுத்தார். டி.கே.சிவகுமார் புதிய முதலமைச்சராகிறார்.
*கருநாடகாவில் அதிக நாட்கள் முதலமைச்சராக பணியாற்றியவர் என்ற பெருமைக்கு உரியவர் சித்தராமையா. தேவராஜ் அர்ஸ்-அய் விட அதிக நாட்கள், 2,792 நாட்கள் முதலமைச்சராக பணியாற்றி உள்ளார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
* நீட் (NEET) தேர்வில் இருந்து விலக்குப் பெற, தவெக அரசு அனைத்து சட்டரீதியான வழிகளையும் ஆராயும் என்று நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
*தொடரும் மின்வெட்டு பிரச்சினை – மக்கள் போராட்டம் உ.பி.யில் குஜராத் மாடல் டிரான்ஸ்பார்மர் வெடித்து விட்டது: அகிலேஷ் கிண்டல். வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்ட மின் கம்பிகளில் இருந்து தீப்பொறிகள் பறக்கின்றன – உத்தரப்பிரதேச மின்சாரச் சூழல் குறித்து அகிலேஷ் கருத்து.
தி இந்து
* “பிரதமர், பிரதானை (Pradhan) பதவி நீக்கம் செய்திருக்க வேண்டும்” – ராகுல் காந்தி கருத்து. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) புதிய ‘திரைவழி மதிப்பிடும் முறை’க்கான (OSM) ஒப்பந்தத்தை, சர்ச்சைக்குரிய ஒரு நிறுவனத்திற்கு வழங்க எடுத்த முடிவில், ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் “கூட்டுச் சதி செய்துள்ளார்” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
* பசு வதையை தடை செய்யும் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யுமாறு தமிழ்நாடு அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் பசுக்களையோ அல்லது கன்றுகளையோ வதைப்பதை (அறுப்பதை) தடை செய்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மாநில அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலச் செயலாளர் பி.சண்முகம் வியாழக்கிழமையன்று வலியுறுத்தினார்.
தி டெலிகிராப்
* நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வுப் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தேசிய தேர்வு முகமையிடம் (NTA) நாடாளுமன்ற நிலைக்குழு கேள்வி.
* சிறுமியை தனிப்பட்ட முறையில் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கீழ் நீதிமன்றம் ஆசாராமுக்கு விதித்த ஆயுள் தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. உடல் நிலையைக் காரணம் காட்டி ஆசாரம் தற்போது பிணையில் வெளியே இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆயுள் தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி செய்ததை அடுத்து, பாலியல் குற்றவாளி ஆசாரம் ஜோத்பூர் சிறையில் சரணடைந்தார்.
டைம்ஸ் ஆப் இந்தியா
* இந்தியா கூட்டணி ஜூன் 6 அன்று கூடுகிறது: நீண்ட இடைவெளிக்குப் பிறகு, நாட்டின் அரசியல் நிலவரத்தை இந்தியா ஆய்வு செய்ய எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஜூன் 6 அன்று கூடுகிறது. “எதிர்க்கட்சி அரசியல் – முன்னோக்கிய பாதை” என்பதே இக்கூட்டத்தின் கருப்பொருளாக இருக்கும் என வட்டாரங்கள் தெரிவித்தன.
* எஸ்.அய்.ஆர் மீதான தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பு முரண்பாடுகள் நிறைந்தது: காங்கிரஸ் விமர்சனம்.
– குடந்தை கருணா
