டெக்சாஸ், நவ. 10- இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், 26 வயதான அய்சக் வால்டெஸ் தனது வீட்டிற்கு அருகிலுள்ள நூலகத்தில் புத்தகங்களைப் படித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. இதனால் அவரது உடல் குலுங்கியதுடன், தலை தரையில் மோதியது.
இதையடுத்து அவர் சுயநினைவை இழந்தார். பின்னர் மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனையில், அவரது தலை பலமாகத் தரையில் மோதியதால் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. ஆனால், அய்சக்கிற்குச் சிகிச்சை அளிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது.
அவர் ‘யெகோவாவின் சாட்சிகள்’ (Jehovah’s Witness) என்ற கிறிஸ்தவத்தின் ஒரு பிரிவைச் சேர்ந்தவர். மத நம்பிக்கை காரணமாக ரத்தம் செலுத்தும் எந்தவிதமான சிகிச்சையையும் ஏற்கமாட்டேன் என்பதைக் குறிக்கும் ‘ரத்தம் வேண்டாம்’ என்ற அட்டையை அவர் வைத்திருந்தார்.
இதன் காரணமாக, அய்சக்கின் மூளையில் தேங்கியிருந்த திரவத்தை வெளியேற்றுவதற்கான மருத்துவச் செயல்முறை மேற்கொள்ளப்படவில்லை.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வாக்சஹாச்சி பகுதியைச் சேர்ந்த அவரது குடும்பத்தினருக்கு, அய்சக் மீண்டும் சுயநினைவுக்குத் திரும்பியதும் பேசத் தொடங்கியதும் நம்பிக்கையை ஏற்படுத்தின.
ரத்தம் செலுத்தும் சிகிச்சையை ஏற்கக் கூடாது என்ற தனது மத நம்பிக்கையில் தொடர்ந்து உறுதியாக இருப்பதாக அய்சக்கும் தெரிவித்தார். ஆனால், அவரது உடல்நிலையில் ஏற்பட்ட முன்னேற்றம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அவர் மரணமடைந்தார்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைத் திருத்துக
அரசுக்கு இடித்துரைக்கும் அய்.நா வல்லுநர்கள்
முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தை (PSTA) பன்னாட்டு மனித உரிமைகள் தரங்களுடன் முழுமையாக சீரமைக்கும் வகையில் திருத்தியமைக்குமாறு இலங்கை அரசாங்கத்தை அய்.நா. வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
“இலங்கையில் 26 ஆண்டுகள் நீடித்த கொடூரமான உள்நாட்டுப் போருக்கு முன்னரும், போரின் போதும், போருக்குப் பின்னரும், சிறுபான்மையினர், மனித உரிமைப் பாதுகாவலர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சிவில் சமூகம் ஆகியோருக்கு எதிரான அதிகார அத்துமீறல்கள் உட்பட, சித்திரவதை மற்றும் கட்டாயக் காணாமல் போதல் போன்ற பல கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுத்த 1979 ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வதற்கான முன்மொழிவை நாங்கள் வரவேற்கிறோம்,” என்று வல்லுநர்கள் கூறினர்.
சட்டமூலத்தில் சில முக்கிய கவலைகள்
இலங்கை அரசாங்கம் பி.எஸ்.டி.ஏ. (PSTA)-வின் மிகவும் மேம்படுத்தப்பட்ட அண்மைய வரைவை முன்வைத்துள்ளது என்பதை அவர்கள் குறிப்பிட்டனர், ஆனால் குறித்த சட்டமூலத்தில் சில முக்கிய கவலைகள் இன்னும் நிவர்த்தி செய்யப்பட வேண்டியுள்ளது என்றும் வலியுறுத்தினர்.
உயிரிழப்பு அல்லது கடுமையான காயத்தை ஏற்படுத்தும் செயல்களுக்கு மட்டுமே பயங்கரவாதத்தின் வரையறையைச் சுருக்குதல், கைது மற்றும் தேடுதலுக்கான இராணுவ அதிகாரங்களைக் கட்டுப்படுத்துதல், தடுப்புக் காவல் உத்தரவுகள் உடனடி நீதித்துறை மேற்பார்வைக்கு உட்படுத்தப்படுவதை உறுதி செய்தல், மற்றும் கட்டுப்படுத்தும் முடிவுகளைக் கொண்ட உண்மையான சுதந்திரமான மறுஆய்வுக் குழுவை நிறுவுதல் ஆகியவை முக்கிய பரிந்துரைகளில் அடங்கும்.
மனித உரிமைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிப்பது அவசியம்
சித்திரவதை அல்லது கொடுமைப்படுத்துதல் மூலம் பெறப்பட்ட ஆதாரங்களை முழுமையாக விலக்குதல், பத்திரிகை ஆதாரங்கள் மற்றும் தொழில்முறை இரகசியத்தன்மைக்கான பாதுகாப்புகள், மற்றும் தவறான செயல்களில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கான விலக்குரிமைகளை நீக்குதல் உள்ளிட்ட கடுமையான நடைமுறைப் பாதுகாப்புகளுக்கும் நிபுணர்கள் அழைப்பு விடுத்தனர்.
பயனுள்ள பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு மனித உரிமைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிப்பது அவசியம் என்பதை வலியுறுத்திய அய்.நா. நிபுணர்கள், சட்டமூத்தை செம்மைப்படுத்த அரசாங்கத்திற்கு உதவ தொழில்நுட்ப உதவியை வழங்கதயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஈரானியப் போர்ச் செலவை
இஸ்ரேல் திருப்பிச் செலுத்த வேண்டும்
இஸ்ரேல் திருப்பிச் செலுத்த வேண்டும்
டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!
வாசிங்டன், நவ. 10- ஈரானுக்கு எதிரான போருக்காக அமெரிக்கா இதுவரை செலவிட்ட ஒவ்வொரு டாலரையும், இஸ்ரேல் முழுமையாகத் திருப்பிச் செலுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கூறுகையில், “நாங்கள் அந்தப் பணத்தை முழுமையாக மீட்டெடுக்கப் போகிறோம்; இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசாங்கங்களிடம் ஏற்கெனவே தெரிவித்துவிட்டோம்” என்றார். பென்டகன் தரவுகளின்படி, ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா இதுவரை சுமார் 4,710 கோடி டாலருக்கும் அதிகமாகச் செலவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
போர்ச் செலவை வசூலிப்பதுடன் சேர்த்து, இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே செய்யப்பட்டுள்ள புதிய ஒப்பந்தத்தின்படி, அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆண்டுதோறும் வழங்கி வரும் சுமார் 4 பில்லியன் டாலர் நிதியுதவி இந்த ஆண்டின் இறுதிக்குள் (2026 இறுதிக்குள்) முழுமையாக நிறுத்தப்படும் என்றும் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இஸ்ரேல் தற்போது பொருளாதார ரீதியாக மிகவும் வளர்ச்சியடைந்த நாடாக இருப்பதால், இனி அவர்களுக்கு இந்த நிதியுதவி தேவையில்லை என்று இஸ்ரேலியப் பிரதமருடன் கலந்தாலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.
அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் B-2 பாம்பர் போர் விமானங்கள் மூலம் ஈரானின் அணுசக்தி தளங்கள் மீதான தாக்குதல்கள் தான் இஸ்ரேலைப் பாதுகாத்தன எனக் குறிப்பிட்ட டிரம்ப், “எங்கள் உதவி இல்லையென்றால் இஸ்ரேல் என்ற நாடே இருந்திருக்காது” என்றும் தெரிவித்தார்.
அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கைகள் தற்போது அமெரிக்க அரசியல் களத்திலும், பன்னாட்டு இராஜதந்திர அரங்கிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
