‘இ20’ அல்ல, இது ‘420’ பெட்ரோல் மோடி அரசை கடுமையாக சாடிய ராகுல் காந்தி!

- Advertisement -

புதுடில்லி, நவ.9 பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு விற்பனை செய்யும் இ20 பெட்ரோல் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலக்கப்படுவதாக அரசு கூறிவரும் நிலையில், அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் எத்தனால் கலக்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது: “இ20 என்பது 420 பெட்ரோலாக மாறிவிட்டது (இந்திய தண்டனைச் சட்டத்தில் 420 என்பது மோசடியைக் குறிக்கும் பிரிவாகும்). பொதுமக்களின் வாகனங்களில் இருந்து பெட்ரோல் திருடப்படுகிறது” என்று அவர் விமர்சித்துள்ளார்.

கர்நாடக அரசு 7 மாவட்டங்களில் இருந்து பெட்ரோல் மாதிரிகளைச் சேகரித்து அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் பரிசோதனை செய்ததில், பரிசோதிக்கப்பட்ட 14 மாதிரிகளில் 11 மாதிரிகளில் 20 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் எத்தனால் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

அய்ஓசிஎல், எச்பிசிஎல்  பிபிசிஎல், நயாரா மற்றும் ஷெல் உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் யாவும் நிர்ணயிக்கப்பட்ட அளவை மீறியுள்ளன. இந்த நிறுவனங்களின் சொந்த ஆய்வகங்கள் எத்தனால் அளவு குறித்த உண்மையான விவரங்களை மறைத்து வெளிப்படுத்தவில்லை.

“மோடி அவர்களே, நாட்டு மக்களின் வாகனங்களில் நீங்கள் என்ன நிரப்புகிறீர்கள் என்று சொல் லுங்கள்? பெட்ரோலில் உண்மையில் எவ்வளவு எத்தனால் உள்ளது? 20 சதவீதத்திற்கும் அதிகமாக எத்தனால் கலக்கும் நிறுவனங்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்?” என்று ராகுல் காந்தி தனது பதிவில் கேள் விகளை எழுப்பியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *