வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப்பணி தேர்தல் ஆணையத்தின் தரவு முரண்பாடு வகைப்பாடு செல்லுமா? உச்ச நீதிமன்றம் விளக்கம்

2 Min Read
- Advertisement -

புதுடில்லி, அக்.29- வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி நடை முறையில் தேர்தல் ஆணையத்தின் ‘தரவு முரண்பாடு’ வகைப்பாடு செல்லுமா? என்பதற்கு உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

டில்லியில் தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியின்போது, வாக் காளர்களுக்கு வழங்கப் படும் அறிவிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனு, தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி.மோகனா ஆகி யோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது தேர் தல் ஆணையம் சார் பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் டி.எஸ்.நாயுடு, “சிறப்பு தீவிரத் திருத்தப் பணியின் ஒவ்வொரு கட்டத்தை யும் நீதிமன்றம் ஏற்ெக னவே விரிவாக ஆய்வு செய்து, அதன் செல்லு படி தன்மையை உறுதிப் படுத்தியுள்ளது” என்று வாதிட்டார்.

இதற்கு நீதிபதிகள் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்தனர். அதன் விவரம் வருமாறு:-

வாக்காளர்களின் விவரங்களைச் சரிபார்க்க தேர்தல் ஆணையம் பயன்படுத்தும் ‘லாஜிக்கல் டிஸ்க்ரெபன்சி’ (தரவு முரண்பாடு) என்ற வகைப் பாட்டின் சட்டப்பூர்வ செல்லுபடி தன்மை குறித்து நதிமன்றம் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.

முன்னதாக, பீகார் வாக்காளர் பட்டியல் திருத்த வழக்கில் அளித்த தீர்ப்பு, இந்த விவகாரத்தில் எழும் அனைத்துப் பிரச் சினைகளுக்கும் அளிக் கப்பட்ட இறுதி தீர்ப்பா காது. பீகாரில் தேர்தல் ஆணையம் தொடக்கத் தில் ‘லாஜிக்கல் டிஸ்க்ரெபன்சி’ என்ற நடை முறையை கையாளவில்லை.

மேற்குவங்கத்தில் இந்த நடைமுறையை மேற்கொள்ள முன்பு அளிக் கப்பட்ட அனுமதி ஒரு தற்காலிக இடைக்கால ஏற்பாடு மட்டுமே. எனவே, இந்த ‘லாஜிக்கல் டிஸ்க்ரெபன்சி’ நடைமுறையின் சட்டப் பூர்வ செல்லுபடி தன்மை குறித்து நாங்கள் இன்னும் முழுமையாக விவாதித்து இறுதி தீர்ப்பு வழங்கவில்லை.

உணர்வுப் பூர்வமான விவகாரங்களில் நீதிமன்றம் வாய்மொழியாக தெரிவிக்கும் கருத்துகள், சில நேரங்களில் சூழ லுக்கு புறம்பாக புரிந்து கொள்ளப்பட்டு, அதுவே இறுதியான நீதிமன்ற தீர்ப்பு போல் சித்தரிக்கப்படுகிறது. இதன் காரணமாக இந்த விவகாரத்தில் மேலும் கருத்து தெரிவிக்க விரும் பவில்லை என்று நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின்போது, தேர்தல் ஆணையத்தின் மத்திய தரவுத்தளமான ‘சரோநெட்’ என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத் தளம் மூலம் வாக்காளர்களின் விவரங்களில் உள்ள குளறுபடிகள் தானாகவே கண்டறியப்படும்.

ஒரு வாக்காளரின் சுயவிவரத்தில் உள்ள விவரங்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு இடையேயான உறவுமுறை விவரங்கள் கணக்கீட்டு, உயிரியல் ரீதியாக அல்லது எழுத்துப்பூர்வமாகப் பொருந்தாமல் முரண்படுவதே இந்த ‘லாஜிக்கல் டிஸ்க்ரெபன்சி’ என்று அழைக்கப்படுகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *