மூன்று நாட்டு தலைவர்கள் முக்கியப் பேச்சுவார்த்தை-விரைவில் சந்திப்பு

1 Min Read
- Advertisement -

பீஜிங், நவ. 8- சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் இடையே சாத்தியமான சந்திப்பு குறித்து விவாதித்து வருவதை சீனா முதன்முறையாக உறுதி செய்துள்ளது.

சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுடன் அமெரிக்காவுக்கு வர்த்தகம், வரி உள்ளிட்ட பல்வேறு விசயங்களில் மோதல் போக்கு இருந்து வருகிறது. அண்மையில் சீன அதிபர் ஜின்பிங், அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டு அதிபர் டிரம்புடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதேபோல் டிரம்ப- ரஷ்ய அதிபர் புதின் அடிக்கடி தொலை பேசியில் உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் டிரம்ப்-ஜின்பிங்-புதின் விரைவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று சீன வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறும் போது, ஜின்பிங், டிரம்ப், புதின் ஆகியோருக்கு இடையேயான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு குறித்து சீனா விவாதித்து வருகிறது. இந்த சந்திப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் சீனா தொடர்பில் உள்ளது என்றார்.

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு இந்த மாதம் சீனாவின் ஷென் சென் நகரில் நடக்கிறது. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக 3 தலைவர்களின் சந்திப்பு நடைபெறும்.

3 வல்லரசு நாடுகளின் தலைவர்களும் ஒன்றாக சந்தித்து பேசினால் அது ஒரு வரலாற்று நிகழ்வாக இருக்கும் என்று வல்லுநர்கள் தெரிவித்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *