சிதம்பரம் கோயில் நிர்வாகத்தை கண்காணிக்க குழு அமைத்ததை எதிர்த்து தீட்சிதர்கள் தரப்பில் மேல்முறையீடாம்!

1 Min Read
- Advertisement -

புதுடில்லி, நவ. 4- சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழுவை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தீட்சிதர்கள் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

சிதம்பரம் நடராஜர் கோயில் கனக சபையில் நின்று பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதி அளித்து அறநிலையத் துறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பொது தீட்சிதர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அதேபோல், அரசாணைக்கு ஆதரவாகவும் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ‘சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தில் உள்ள சீர்கேடுகள் களையப்படும் வரை நிர்வாகத்தை கவனிக்க, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் வி.பாரதிதாசன், ஆர்.சுரேஷ் குமார் உள்ளிட்டோரை கொண்ட இடைக்கால நிர்வாகக் குழுவை அமைத்து உத்தரவிட்டது. மேலும், அக்குழுவில், முன்னாள் அய்ஏஎஸ் அதிகாரி ராஜேந்திரனை உறுப்பினராகவும், பொது தீட்சிதர்கள் சங்கத்தின் செயலாளர் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை செயலர் ஆகியோரை அலுவல்சாரா உறுப்பினர்களாகவும் நியமித்தது.

இந்த நிர்வாகக் குழுவானது, கனகசபையில் நின்று அனைத்து பக்தர்களும் வழிபாடு செய்யவும், தேவாரம், திருவாசகம் பாடுவதில் சம வாய்ப்பு வழங்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். அன்றாட பூஜைகள், திருவிழாக்களை நடத்துவது பொது தீட்சிதர்களின் பிரத்யேக உரிமை என்பதால் அதில் நிர்வாகக் குழு தலையிடாது எனவும், கோயிலின் அன்றாட வரவு – செலவு கணக்குகளை பொது தீட்சிதர்கள் ஒவ்வொரு மாதமும் 5ஆம் தேதி நிர்வாகக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து கோயில் பொது தீட்சிதர்களின் செயலாளர் ஜெ.ஜெயசூர்யா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *