22 பேருக்கு மரண தண்டனை விதித்த உத்தரப் பிரதேச நீதிபதி வழக்குகள் பிற நீதிமன்றத்திற்கு மாற்றம்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

லக்னோ, ஆக. 22- உத்தரப் பிரதேச மாநிலத்தின் நீதிமன்றம் ஒன்றில், கடந்த நான்கு மாத இடைவெளியில் 22 குற்றவாளிக ளுக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி ரவிகுமார் திவாகர் உத்தர விட்டுள்ளார்.

நீதிபதி ரவிகுமார் திவாகர், மிகக் குறுகிய காலத்தில் இத் தனை மரண தண்டனைத் தீர்ப்புகளை வழங்கியிருப்பது சட்ட வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இவருடைய நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த சுமார் 100 கொலை வழக்குகள், நிர்வாகக் காரணங்களுக்காகவும், விசா ரணை நடைமுறைகளைச் சீரமைப்ப தற்காகவும் வேறு நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.

வழக்குகளை விரைந்து முடிப்பதிலும், கடுமையான தண்டனைகளை வழங்குவதிலும் இந்த நீதிபதி மிகுந்த முனைப்புடன் செயல்பட்டு வருவதாகக் கூறப்படு கிறது. இருப்பினும், வழங்கப்பட்ட மரண தண்டனைத் தீர்ப்புகள் மற்றும் வழக்குகள் மாற்றப்பட்ட விதம் குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *