சவூதி அரேபியாவுக்கான இந்திய விமானச் சேவைகள் தொடர்ந்து ரத்து சிக்கிய பயணிகளுக்குத் தூதரகம் உதவி

1 Min Read
- Advertisement -

ரியாத், நவ. 3- பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில்கொண்டு, சவூதி அரேபியாவுக்கான விமான சேவைகளை இந்திய விமான நிறுவனங்கள் தொடர்ந்து ரத்து செய்து வருகின்றன. இதனால் சவூதியில் சிக்கியுள்ள இந்தியப் பயணிகளுக்கு உதவ உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து தொடர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

வளைகுடா பிராந்தியத்தில் பரந்த மோதலுக்கு மத்தியில், ஈரான் ஆதரவு பெற்ற யேமனின் ஹூதி கிளர்ச்சி அமைப்பினர் சவூதி அரேபியாவின் விமான நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து அவ்வப்போது ஏவு கணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

கடந்த அக்டோபர் 21ஆம் தேதி சவூதி அரேபியாவின் தம்மாம் நகரில் உள்ள கிங் ஃபஹத் பன்னாட்டு விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஓர் இந்தியர் உயிரிழந்தார். மேலும் இரு இந்தியர்கள் காயமடைந்தனர். இதேபோல், கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள ஷேபா எண்ணெய் வயலில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு இந்தியர் காயமடைந்தார். சவூதியில் விமான நிலையங்கள், எரிசக்தி மய்யங்கள் உள்ளிட்ட பொது உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களால் ஜெட்டா, ரியாத், தம்மாம் ஆகிய நகரங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் விமானங்களை நவம்பர் 14 வரை ரத்து செய்வதாக ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ ஆகிய நிறுவனங்கள் அறிவித்தன.

தொடர்ந்து ஆகாசா ஏர் நிறுவனம் 1.11.2026 அன்று ஜெட்டா நகருக்கான விமான சேவையை நவம்பர் 18 வரையும், ரியாத் நகருக்கான சேவையை நவம்பர் 30 வரையும் ரத்து செய்வதாக அறிவித்தது. அதேநேரம் சவூதி விமான நிறுவனங்கள் சில விமானங் களை இந்தியாவுக்கு இயக்கி வருகின்றன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *