பல்கேரியாவின் முதல் பெண் அதிபர் தேர்வு

2 Min Read
- Advertisement -

சோபியா, நவ. 3- பல்கேரியா நாட்டில் அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் இலியானா அயோடோவா (61) வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம், அந்நாட்டின் முதல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் அதிபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தற்போதைய பிரதமர் ரூமென் ராதேவ் அதிபராக பதவி விலகியதைத் தொடர்ந்து, முன்னாள் அய்ரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரான இலியானா அயோடோவா பொறுப்பு அதிபராகப் பொறுப்பேற்றிருந்தார்.

இந்நிலையில், முழு நேர அதிபர் பதவிக்கு கடந்த 1.11.2026 அன்று நடைபெற்ற இறுதிச்சுற்று தேர்தலில், பிரதமர் ரூமென் ராதேவின் ஆதரவைப் பெற்ற இலியானா அயோடோவா 57.6 சதவீத வாக்குகளைப் பெற்று, வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் இடைக்காலப் பிரதமர் ஆண்ட்ரே குரோவ் 39.5 சதவீத வாக்குகளைப் பெற்றார்.

பல்கேரியாவை ஒட்டிய கருங்கடல் கடலோரப் பகுதிகளில் வணிகக் கப்பல்கள் மீது அண்மைக் காலமாகத் தொடர்ந்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் களின் பின்னணியில் இத்தேர்தல் நடைபெற்றுள்ளது. குறைந்தது 24 மாலுமிகள் கொல்லப்பட்ட இத்தாக்கு தல்களை இரு வேட்பாளர்களும் வன்மையாகக் கண்டித்தனர்.

நாடாளுமன்றமே பெரும்பாலான முடிவெக்கும் அதிகாரங்களைக் கொண்டுள்ள பல்கேரியாவில், ரஷ்ய ஆதரவு நிலைப்பாடு கொண்ட பிரதமர் ரூமென் ராதேவ்-அதிபர் இலியானா அயோடோவா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

அதேநேரம், இத்தேர்தலில் தோல்வியடைந்த ஆண்ட்ரே குரோவ், மேற்கத்திய ஆதரவு மற்றும் சீர்திருத்தக் கட்சிகளின் ஆதரவுடன் பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் உக்ரைனுக்கு நீண்டகாலமாக ஆதரவளித்து வருவதுடன், இடைக்காலப் பிரதமராக இருந்தபோது அந்நாட்டு நிர்வாகத்துடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டால்
இரண்டு நாளில் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க தயார்: ஈரான்

டெக்ரான், நவ. 3- எங்கள் நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டால் ஹார்முஸ் ஜலசந்தியை அடுத்த இரண்டே நாட்களில் மீண்டும் திறக்கத் தயார் என ஈரான் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாய் கூறியதாவது: அமெரிக்காவுடன் மத்தியஸ்தர்கள் வழியாக சமரச பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. போர் பதற்றத்தைத் தணிக்க முதன்மை கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதில் ஈரானின் எண்ணெய் துறை மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்குவதோடு, வெளிநாடுகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானிய சொத்துகளை உடனே விடுவிக்க வேண்டும்.

ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் அமெரிக்க கடற்படை முற்றுகையைக் கைவிட வேண்டும். பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும், ஓமன் நாட்டின் ஒப்புதலுடன் உருவாக்கப்பட்டுள்ள புதிய போக்குவரத்து வழித்தடத்தை அமெரிக்கா அங்கீகரிக்க வேண்டும். இதுபோன்ற மிக முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். இவற்றை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளும்பட்சத்தில் 2 நாட்களுக்குள் ஹார்முஸ் நீரிணையை திறக்க ஈரான் தயாராக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *