லடாக், நவ 01 2027-ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை முழுமையாக முடித்த இந்தியாவின் முதல் யூனியன் பிரதேசம் என்ற பெருமையை லடாக் பெற்றுள்ளது.
இது குறித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு செயல்பாட்டு இயக்குநர் அமித் சர்மா கூறுகையில், “அதிக பனிப்பொழிவு கொண்ட லடாக் பகுதியில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் ஏற்ெகனவே நிறைவடைந்துவிட்டன. இதற்கிடையே, விடுபட்டிருந்த மாவட்ட மக்கள் தொகை கையேடு தயாரிப்பதற்கான களப்பணிகளும் அக்டோபர் 30-ஆம் தேதியுடன் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளன” என்று தெரிவித்தார். இந்தக் கணக்கெடுப்பில் லடாக்கின் லே மற்றும் கார்கில் ஆகிய 2 நகரங்கள் மற்றும் 244 கிராமங்கள் முழுமையாக உள்ளடக்கப்பட்டன. பனிப்பொழிவு தீவிரமடைவதற்கு முன்னரே திட்டமிட்டபடி இப்பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன.
