ராமேஸ்வரம், ஜூலை 13– ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் (11.7.2026) 469 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்றுக்கொண்டு, பாக் நீரிணை கடற்பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
அவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு ரோந்துப் படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை அச்சுறுத்தி விரட்டியடித்தனர். மேலும், மீனவர்களின் படகுகளை சிறைபிடிக்கும் நோக்கில் தங்களது அதிவேக ரோந்து கப்பல் மூலம் தீவிரமாகப் பின்தொடர்ந்து துரத்தினர்.
இலங்கை கடற்படையின ரின் பிடியில் சிக்காமல் தப்பிப் பதற்காக, மீனவர்கள் தங்களது விலைமதிப்பற்ற மீன்பிடி வலைகளை கடலிலேயே வெட்டி வீசிவிட்டு அவசர அவசரமாகப் படகுகளைத் திருப்பித் தப்பினர்.
வலைகளை இழந்ததால் பெரிய விசைப்படகுகள் அந்தப் பகுதியில் தொடர்ந்து மீன்பிடிக்க முடியாமல், பெரும் இழப்புடன் வேறு பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இந்நிகழ்வு ராமேஸ்வரம் மீனவர்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சி யையும் ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை கடற்படை அட்டூழியம்! ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு!
Leave a Comment
