திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை
உள்ளே ஒரு மறைமுகத் திட்டம், வெளியே ஒரு வேடம் போடும் ஆர்.எஸ்.எஸ். ஒரு கபட வேடதாரி என்றும், நாடு காவி மயமாவதைத் தடுக்க ஒன்றிணைந்து செயலாற்றுங்கள் என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
மராத்திய மாநிலம் பூனே பகுதியில் வாழும் பார்ப்பனர்க ளில் – மற்றவர்களைவிட உயர்ந்தோர் என்று சொல்லிக் கொள்வோர் (பார்ப்பனர்களுடன் கூட ஒப்பிட்டும், காயஸ் தர்கள் என்ற அடுத்து உருவான ‘‘பிராமணருக்கு அடுத்த காயஸ்தர்களுக்கும்’’ கூடத் தாங்களே மேலானவர்கள் என்று கூறிக் கொள்வர்) புனே வாழ் பாரப்பனர்களான சித்பவன் என்ற பிரிவினர் ஆவர். ‘உயர்ஜாதியிலும் உயர்ஜாதிப் பிரிவு’ என்ற ஜாதி அதிகாரத்தை நிலை நிறுத்திடும் நோக்கம் கொண்டோர். பிராமணர் – சூத்திரர் என்ற இரண்டு பிரிவே உண்டு; அவற்றுக்கு இடையில் உள்ளவை என்று ெசால்லப்பட்ட சத்திரியர், வைசியர் பிரிவுகள் கூட இல்லை என்றெல்லாம் 19 ஆம் நூற்றாண்டில் பெரும் அறிவு ஜீவிகள் என்ற பெயரில், ஆணவப் போராட்டத்தினை நடத்தி நிறுவிட முயன்றனர்.
ஜோதிராவ் பூலே
அதே புனேவில் (மராத்தியத்தில்) ஜோதிராவ் பூலே என்ற புரட்சிக்காரர், ‘அப்போதைய சுயமரியாதை இயக்கத்தை’ உருவாக்கினார். ஒடுக்கப்பட்ட மக்களான ‘சூத்திரர்களும்’, பெண்களும் (அவர்கள் உயர்ஜாதியாய் இருந்தாலும்கூட) கல்வி மறுக்கப்பட்ட, ‘அடிமைச் சமூகங்கள்’ (Servile Class) என்ற நிலையில் இருந்ததைக் கண்டார், அதை எதிர்த்தே இயக்கத்தைத் தோற்றுவித்தார்.
பார்ப்பனர்களுக்கு வேலை செய்யும் படிப்பறிவற்ற – படிக்கத் தகுதியற்ற கீழ்மக்கள் என்று தாங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையை எதிர்த்து மராத்தியத்தில் ஒரு பெரும் போராட்டம் வெடித்தது – பார்ப்பனரல்லாதோரில் பெரும் பகுதியினர் ஜோதிபா பூலே – சாவித்திரி பாய் பூலேவின் இயக்கமான ‘‘சத்திய சோதக் சமாஜ்’’ –இல் சேர்ந்து, கல்வி பெற்றனர்.
ஹிந்து மகாசபையின் நோக்கம்!
ஆனால், தங்களுக்கே சடங்குகள் நடத்த ஏகபோக உரிமை உண்டு என்று பார்ப்பனர்கள் உரிமை கொண்டாடினர். பார்ப்ப னரல்லாதவர்கள் வீட்டில், பார்ப்பனர்களை அழைக்காமல், தாங்களே திருமணங்களை நடத்திக் கொண்டாலும்கூட, அவர்களுக்குரிய தட்சணையை வரி செலுத்துவதைப்போல பார்ப்பனப் புரோகிதர்களுக்கு அளிக்கவேண்டுமென்று வழக்காடி, இடையில் வென்று, பிறகு சட்டமன்ற (பம்பாய்) சட்டங்கள் மூலம் 20 ஆம் நூற்றாண்டில் வெற்றியும் பெற்றனர்!
ஆரிய அழுத்தமும், அதிகார ஆணவமும் மிக அதிகமானக் கொதி நிலைக்குச் சென்றவுடன், அது வெடிக்கத் தொடங்கியதை உணர்ந்த மராத்தியப் பாரப்பனர்கள், ‘ஹிந்து மகாசபை’ என்று தொடங்கி, முஸ்லிம்கள் வெறுப்பு – விரோதத்தை மய்யமாக்கினார்கள். அதுதான் ஹிந்துத்துவாவை அரசியல் கோட்பாடாக்கிய வி.டி.சாவர்க்கர் ‘இரு நாடுகள் கோட்பாடு’ (Two Nation Theory) உருவாக்கியதன் பின்னணி. அதன் விளைவே இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை.
ஆர்.எஸ்.எஸ். என்னும் முகமூடி!
சூத்திர ஜாதி, தாழ்த்தப்பட்ட, பழங்குடி என்ற பிரிவுகள் மூலம் பகிரங்கமாகத் தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பிறவி இழிவையும், மறுக்கப்பட்ட கல்வி, உரிமைகளையும் வற்புறுத்தி, பார்ப்பனரல்லாதார் ஒன்றிணைவதை உணர்ந்த வுடன், ஆரியர்கள் இனி ‘ஹிந்து மகாசபை’ தங்களது ஆதிக்கத்தைக் காப்பாற்றாது என்று உணர்ந்த அதே ‘சித்பவன்’ பார்ப்பனர்கள், வெளிப்படையாக அந்த அடையாளத்தைக் கூறாமல், மறைத்து, ஏதோ தேசத்திற்கே தொண்டூழியம் செய்யப் போவது போன்று, மாறுபட்ட ஓர் அவதாரத்தை உருவாக்கி, ‘ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம்’ (Rashtriya Swayam sevak Sangh – RSS)– ‘தேசத்திற்குத் தொண்டு செய்பவர்கள்’ என்ற முகமூடி அணிந்து தங்களது சூழ்ச்சிப் பணியைத் தொடர்ந்தனர்.
தேச மக்களுக்கே தொண்டு செய்வதுதான் அவர்கள் நோக்கமானால், ஏன் இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், நாத்தி கர்கள் – கம்யூனிஸ்டுகள் ஆகியோர் எங்கள் விரோதிகள், ஜாதி ஒழிப்பாளர்கள் எங்கள் விரோதிகள் என்று சொல்ல வேண்டும்? அரசியலமைப்புச் சட்டமாக, ஜாதி – வருண தர்மத்தை வலியுறுத்தும் மனுதர்மத்தையே வைக்கவேண்டும் என்ற கொள்கைத் திணிப்பாளர்களாக ஏன் இருக்கவேண்டும்?
இந்தியாவில் தற்போதுள்ள இஸ்லாமியர்கள், பாகிஸ்தான் பிரிந்து சென்றபோதுகூட, இந்தியாவையே தங்கள் நாடாகக் கொண்டு இருந்தவர்கள்தானே! ஆர்.எஸ்.எஸ். செய்வது தேசத் தொண்டு என்றால், அதில் ஏன் இரட்டை வேடம், இரட்டை நாக்கு? எதற்காக ரகசிய அமைப்பு? மத அடிப்படையில், 87 சதவிகிதப் பெரும்பான்மை கொண்டது ஹிந்து மதம் என்றால், அதில் ஒரு ஜாதியின் ஆதிக்கத்தை மட்டும் நிலை நிறுத்த ரகசியமான வேலைத் திட்டம் ஏன்?
வெளிப்படையற்ற இரகசிய அமைப்பு
பெரும்பான்மை மதவெறியைக் கிளப்பி, வந்தேறிகளின் ராஜ்யத்தை வகையாக நடத்துவதற்குத்தானே, இந்த ஆர்.எஸ்.எஸ். என்ற உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் வெளிப்படையற்ற இரகசிய அமைப்பை இன்னமும் நடத்தி வருகிறார்கள்.
மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம், இந்தியா விலேயே ஆர்.எஸ்.எஸ்.சைத் தவிர, வேறு எந்த அமைப்பும் கிடையாது!
அன்றைய காங்கிரஸ் அரசுகளைத் ‘‘தாஜா’’ செய்து, சில நிபந்தனைகளுக்கு உட்படுவதுபோல் காட்டி, தங்கள் மீதான தடையை நீக்கிக் கொண்டார்கள். பிறகு, தங்களுக்கென ஓர் அரசியல் பிரிவாக பி.ஜே.பி.யை உருவாக்கினார்கள். அதனை ஹிந்திப் பிரதேசங்களிலும், பிறகு பல்வகை தந்திர சூழ்ச்சிகளினாலும், வெட்கமின்றிப் பல்வகைக் கட்சிகளை பதவி மூலம் அடியோடு தூக்குவதன்மூலம் பிற பகுதிகளிலும் நிலை நிறுத்தி, தங்களது ‘சாம்ராஜ்ஜியத்தை’ இன்று நடத்திக் கொண்டுள்ளனர்.
அசல் பாசிசம்!
பேசுவது பெருந்தத்துவம், காட்டுவது தொண்டு முகம்; ஆனால், நடத்தையெல்லாம், அசல் பாசிசம்.
ஹிட்லரின் ‘‘சுவஸ்திக்’’தானே தொடக்கத்தில் அவர்கள் சின்னம்!
ஹிட்லரின் ஆரிய மேலாதிக்க உணர்வும், சர்வாதிகாரமும் கொண்டு, கூடுதலாகத் தந்திரங்கள், சூழ்ச்சிகள், வித்தைகள் மூலம் – நாட்டை ஆரிய, வேத சமஸ்கிருத மயமாக்கி, ஹிந்துத்துவா ஆட்சி நடத்துகிறார்கள். ஆனால், இந்த ஒப்பனை வெகு நாள்களுக்குத் தொடராது.
தமிழ்நாடு பெரியார் மண்!
தென்னாடு, குறிப்பாகத் தமிழ்நாடு. பெரியார் மண் – பகுத்தறிவு மண் என்பதால், ஆரியப் பணபாட்டுப் படையெடுப்பை, ஹிந்தி, சமஸ்கிருத கலாச்சாரம் மற்றும் பார்ப்பனிய ஜாதி, சம்பிரதாயம், சடங்குகளை எதிர்த்து அறிவுப் புரட்சி செய்த மண் என்பதால், அவர்களுடைய பாச்சா இங்கு பலிக்கவில்லை!
எப்படியாவது ஆட்சி அதிகாரங்களைக் கைப்பற்றி, அதன்மூலம் தமது எதிரிகளை ஒடுக்கவும், சமத்துவ, ஜாதி ஒழிப்பு பேசுவோரை நசுக்கவும், பண்பாட்டுப் படை யெடுப்பைத் தொடர்ந்து நடத்தி, தமிழ்நாட்டை வீழ்த்தத் துடிக்கிறார்கள். அதை எதிர்த்து, சமூகநீதியை, சுயமரியாதையை நிலை நிறுத்தல் இன்றைய காலகட்டத்தின் அவசியத் தேவை.
ஆர்.எஸ்.எஸ்.சின் நோக்கங்கள்!
சமூகத்தில் – ஜாதி வருண தர்மக் காவல் அரண் ஆர்.எஸ்.எஸ்.
அரசியலில் – மாநிலங்களை அழித்து, கூட்டாட்சியை ஒழித்து ஒற்றை ஆட்சி ஏற்படுத்த முனைவது.
பொருளியலில் – தனிப்பட்ட பார்ப்பன – பனியாக்களிடம் (அம்பானி, அதானி போன்றவர்களிடம்) நாட்டை ஒப்படைத்தல்.
பண்பாட்டில் – சமஸ்கிருத வேதக் கலாச்சாரம் என்ற பெயரில், மற்ற மக்களின் பண்பாட்டை அழித்து, ஆரிய மயமாக்கல் – அதற்கு ஆதார அடிப்படைகளாக கடவுள், புராணங்களைப் பரப்புதல். அதன்மூலம், சம உரிமை, சம வாய்ப்புகளைப் பறித்து, நாசூக்காக பொருளாதார வலை வீசி, பார்ப்பன மேலாண்மையை நாளும் பெருக்குதல். இவையே ஆர்.எஸ்.எஸ்.சின் நோக்கங்கள்!
ஒத்த கருத்துள்ளவர்கள்
உடனே இணைந்து செயலாற்றுக!
மறைமுகமாக உள்ளே ஒரு திட்டம் (Hidden Agenda); வெளியே வேறு ஒரு வேடம். அதுவே ஆர்.எஸ்.எஸின் செயல்முறை!
‘பசுந்தோல் போர்த்திய ஓநாய்கள் ஒரு போதும் ‘‘சைவ மாகாது’’ என்பதை உணர்ந்து, இந்தியாவைக் ‘காவி மயமாக்கும்’ கொடுமையைத் தடுத்து நிறுத்த, எச்சரிக்கையுடன் ஒத்த கருத்துள்ளவர்கள் உடனே இணைந்து செயலாற்றுக!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
20.10.2026
