தமிழர்கள் கல்வியைப் பண்பாட் டுப் படையெடுப்பால் ஒழிக்கத் திட்டமிட்ட ஆரியர்கள் உருவாக்கிய தடைகளை உடைத்து முன்னேறும் தமிழர்களின் கல்விக்கண்ணைக் குருடாக்க ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பின் கண்டுபிடிப்பான விஜய தசமி-அடுத்த கட்டமாக மேலும் வலுவூட்ட ‘வித்யாரம்பம்’ என்ற புதிய கதைகளை உலவ விடுகிறார்கள்.
“விஜயதசமி” அன்று பள்ளியில் குழந்தைகளை சேர்த்தால் கல்வியில் சிறந்து பிள்ளைகள் மிளிர்வார்கள் என்பதே இதன் சாரம். முன்பு படிப்பைத் தடுத்தார்கள். பிறகு தந்தை பெரியார் போன்ற தலைவர்கள் தொடர் பேருழைப்பால் கல்வியில் தமிழர் வீட்டுப் பிள்ளைகள் சாதிக்கத் தொடங்கிய பின், விஜயதசமி என்று சொல்லி அன்றுதான் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று கதை விடுகிறார்கள். அக்ரகாரத்துப் பிள்ளைகள் எத்தனை பேர் அன்று சேர்க்கப்படுகிறார்கள்?
தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை ஜூன் மாதம் பள்ளிகள் தொடங்கிய நாளிலிருந்து முதல் மற்றும் பிற வகுப்புகளுக்கு சேர்க்கை நடைபெறுகிறது. ஜூலை மாத இறுதியில் பள்ளிக் கல்வித் துறை மாணவர் சேர்க்கைப் புள்ளி விவரத்தை இறுதி செய்கிறது. அதற்குப் பின் சேர்க்கை கிடையாது. ஆனால், விஜயதசமி பெயரால் அக்டோபர் மாதத்தில் விஜயதசமி அன்று ஒரு நாள் மட்டும் சேர்க்கை நடைபெறுகிறது.
பள்ளியின் சார்பில் முதல் வகுப் புக்கு சேர்க்கை முடித்து இரண்டு மாதங்களுக்கு பிறகு ஒரு நாள் மட்டும் “விஜயதசமி‘‘ சேர்க்கை நடைபெறுவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. பொதுவாக, சேர்க்கை முடித்தபின் இதுபோன்ற மதரீதியான – மூடத்தனமான ஒரு செயலுக்கு முக்கியத்துவம் தருவது சரியா? கல்வித்துறைச் சட்டப்படி ஏற்கலாமா? அறியாமையை ஒழிக்கும் கல்விக்கே, மூடத்தனமான விஜயதசமி போன்ற பண்பாட்டுப் படையெடுப்புகளை அறிவுலகம் ஏற்கலாமா? இதுபோன்று ஒவ்வொரு மதமும் சொன்னால் என்னாவது?
மாணவர்கள் சேர்க்கைக்கு நாம் எதிரானவர்கள் அல்ல, குறிப்பிட்ட நாள் என்று மத அடிப்படையில் ஒன்றை உருவாக்கும் சூழ்ச்சியும், அதன் உள்நோக்கமுமே அது பற்றிய நமது எதிர்ப்புக்கு காரணம் என்பதையும் நாம் இங்கே சுட்டிக்காட்ட விரும்பு கிறோம். இது ஆரியர்களின் அப்பட்டமான பண்பாட்டுப் படை யெடுப்பாகும்.
‘விஜயதசமி வித்யாரம்பம்’ என்று இன்றைய தினம் மாணவர் சேர்க்கை யின் போது, தட்டில் பச்சரியை வைத்து, அதில் ஸ்வஸ்திக் சின்னம் வரையச் செய்கிறார்கள். பொதுவாக சேர்க்கையின் போது அது எந்த நாளானாலும் அரிசியில் ‘அ’ போடும் பழக்கமே இருந்தது. விஜயதசமி ‘வித்யாரம்பம்’ என்ற பெயரில் ஸ்வஸ்திக் குறியை மாணவர்களின் விரலைப் பிடித்து வரையப்படுகிறது. ஸ்வஸ்திக் சின்னம் பார்ப்பனர்களின் நால்வருணக் கோட்பாட்டின் அடையாளம். உலகச் சர்வாதிகாரியான ஹிட்லர் (ஆரியர்) தனது கொடிக்கு ஸ்வஸ்திக் குறியை வைத்தார். அதையே இவர்கள் இன்று வைப்பது ஆரியப் பண்பாட்டுப் படை யெடுப்பின் அடையாளம் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.
தமிழ்நாடு அரசு சிந்திக்க வேண் டும். விஜயதசமி நாளன்று மாணவர் சேர்க்கை என்பது நிறுத்தப்பட வேண்டும். ஆனால், கல்வி ஆண்டுக்கு மாறாக, ஆரிய சூழ்ச்சியை மக்களுக்கு அம்பலப்படுத்துவது நமது கடமை என்பதை ஒவ்வொரு தமிழரும் உணர்ந்து செயல்படுவோம். பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பைத் தகர்ப்போம்.
– முனைவர் அதிரடி க.அன்பழகன்
