கரூர், அக். 20- தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் உருவாக்கிய, சிறிய ரக செயற்கைக் கோள், ஹீலியம் பலூன் வாயிலாக வெற்றிகரமாக விண்ணில் ஏவப் பட்டது.
கரூர், வி.எஸ்.பி., தனியார் பொறியியல் கல்லூரியில், ‘எலக்ட் ரிக்கல் அண்ட் கம்யூனிகேசன் இன்ஜினியரிங்’ படிக்கும் இரண்டா மாண்டு மாணவர் விக்னேஷ், ஸ்டார்ட் அப் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இவர், விண்வெளி ஆராய்ச்சியில் கொண்ட ஆர்வத்தால், தனது குழுவினருடன் இணைந்து, சிறிய ரக செயற்கைக்கோளை வடிவமைத் துள்ளார். கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், ஹீலியம் பலூன் மூலம் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
மாணவர் விக்னேஷ் கூறியதாவது: வழக்கமான ராக்கெட் ஏவுதலுக்கு பல கோடி செலவாகும் சூழலில், மிகக் குறைந்த செலவில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் நோக்கில், ஹீலியம் பலூன் ஏவுதல் முறை தேர்ந்தெடுக்கப்பட்டது.
இதன் மூலம் செயற்கைக்கோள் பூமியிலிருந்து, 20 முதல் 30 கி.மீ., உயரம் கொண்ட ஸ்ட்ரேட் டோஸ் பியர் அடுக்கு வரை கொண்டு செல்லப்பட்டது.
கரூர் மாவட்டத்தில் நிலவும் அதீத வெப்ப சூழலுக்கான காரணங்களை ஆராய்வதும், உலகளாவிய வானிலை மாற்றத்தை ஏற்படுத்தும் ‘எல் நினோ’ தாக்கம் குறித்த துல்லியமான தரவுகளை சேகரிப்பதும் இந்த ஆய்வின் முதன்மை நோக்கமாகும். மேலும், வளிமண்டல வெப்பநிலை, ஈரப்பதம், காற்று அழுத்தம் ஆகிய முக்கிய தரவுகளை இந்த செயற்கைக்கோள் நேரடியாக தரைக்கட்டுப்பாட்டு மய்யத்திற்கு அனுப்பி வருகிறது.
திட்டமிட்ட உயரத்தை அடைந்து, வளிமண்டல மேலடுக்கில் தேவையான தரவுகளை பதிவு செய்த பிறகு, ‘டிசென்ட் லேண்டிங்’ முறையில் பாராசூட் போன்ற அமைப்பின் மூலம் இந்த சாதனம் பத்திரமாக பூமிக்கு மீட்டெடுக்கப்பட்டு, கூடுதல் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட உள்ளது.
இதற்கு தமிழ்நாடு அரசின் ‘ஸ்டார்ட் அப் டி.என்.,’ திட்டம் மூலம், 1 லட்சம் ரூபாய் மானிய உதவி கிடைத்துள்ளது. இவ்வாறு, கூறினார்.
