ஸ்பெயின் நாட்டில் வீடுகள் பற்றாக்குறையால் மக்கள் சொந்த நாட்டிலேயே ‘அகதி’களாகும் நிலை

2 Min Read
- Advertisement -

ஸ்பெயின், அக். 17- ஸ்பெயினில் கடுமையான வீடுகள் பற்றாக்குறை நிலவுகிறது. ஸ்பெயின் வங்கி வெளியிட்டுள்ள தகவலின்படி, தற்போது நாட்டில் 7,50,000 வீடுகளுக் கான பற்றாக்குறை உள்ளது. இது 2028-ஆம் ஆண்டுக்குள் 10 லட்சத்தை எட்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டுமானங்களின் வேகம் குறைவு, கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் உலகளாவிய பொருளாதாரச் சிக்கல்கள் இதற்கு முக்கியக் காரணங்களாகும்.

கடந்த பத்தாண்டுகளில் ஸ்பெயி னில் சராசரி வாடகை இரண்டு மடங்குக்கும் மேலாக, அதாவது 84 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. சில முக்கிய நகரங்களில் இந்த உயர்வு இன்னும் தீவிரமாக உள்ளது. உதாரணமாக, தெற்கு நகரான மலகாவில் 113 சதவீதம் மற்றும் மார்பெல்லாவில் 150 சதவீதம் வரை வாடகை அதிகரித்துள்ளது. தேசிய புள்ளியியல் நிறுவனத்தின் தகவல்படி, ஸ்பெயினில் சராசரி மாத வருவாய் 2,460 யூரோக்கள் ஆகும். ஆனால், மாட்ரிட் நகரில் 50 சதுர மீட்டர் கொண்ட ஒரு குடியிருப்புக்கு மாத வாடகையே சுமார் 1,170 யூரோக்கள் வசூலிக்கப்படுகிறது. இது சராசரி வருமானத்தில் பாதியாகும். இதனால் மக்கள் வருமானத்தின் பாதியை வாடகைக்கே செலவிடும் அவலநிலை காணப்படுகிறது.

உயரும் வாடகை

ஸ்பெயின் அரசியலமைப்பின் 47ஆவது பிரிவின்படி, மக்களுக்குக் கண்ணியமான மற்றும் போதுமான வீட்டு வசதிக்கான உரிமையை வழங்க அரசு கடமைப்பட்டுள்ளது. ஆனால், ஏர்பிஎன்பி (Airbnb) போன்ற சுற்றுலாத் தலங்கள் மூலம் வீடுகள் அதிக லாபத்துக்கு வாடகைக்கு விடப்படுகின்றன. பன்னாட்டு நிதி நிறுவனங்களும் முதலீட்டாளர்களும் மொத்தமாக வீடுகளை விலைக்கு வாங்கி, செயற்கையாக வாடகையை உயர்த்துகின்றனர்.

மேலும், ஸ்பெயினில் அரசுக்குச் சொந்தமான சமூக நல வீடுகளின் எண்ணிக்கை 3 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. 2008-ஆம் ஆண்டுக்குப் பின் ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவைத் தொடர்ந்து, வீட்டு வசதித் துறை பெரும்பகுதி தனியாரிடம் சென்றதும் நெருக்கடியை ஆழப்படுத்தியது. அய்ரோப்பிய நாடுகளான ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் போர்ச்சுகல் நாடுகளிலும் இதேபோன்ற சிக்கல்கள் நீடிக்கின்றன.

தேர்தல் அறிவிப்பு

மக்களின் கோபத்தைத் தணிக்க, பிரதமர் பெட்ரோ சான்செஸ் தலைமையிலான அரசு அவசரச் சட்டங்களைக் கொண்டு வந்தது. எனினும், நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மை இல்லாததால், எதிர்க்கட்சிகளான மக்கள் கட்சி (PP), தீவிர வலதுசாரி வி.ஓ.எக்ஸ். (Vox) மற்றும் கத்தலோனியக் கட்சி (Junts) ஆகியவை ஒன்றிணைந்து இந்த மசோதாவைத் தோற்கடித்தன. வாடகை உரிமையாளர்களைக் கட்டுப்படுத்தினால் சந்தையில் வீடுகளின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.

இந்த அரசியல் முடக்கத்தாலும் தொடரும் போராட்டங்களாலும் பெரும் பின்னடைவைச் சந்தித்த பிரதமர் சான்செஸ், நாடாளுமன்ற முடக்கத்தைத் தவிர்க்கும் பொருட்டு திடீரென 2026 நவம்பர் 29 அன்று நாட்டில் பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

ஸ்பெயினின் இந்த வீட்டு வசதி நெருக்கடி வெறும் பொருளாதாரப் பிரச்சினை மட்டுமல்ல. அது, அந்நாட்டின் சமூக அமைப்பையே உலுக்கியுள்ள மாபெரும் வாழ்வா தாரப் போராட்டமும்தான். வர விருக்கும் நவம்பர் பொதுத் தேர்தல், இந்த நெருக்கடிக்கு ஸ்பெயின் அரசு எத்தகைய தீர்வை எட்டப்போகிறது என்பதைத் தீர்மானிக்கும் மிக முக்கியக் கட்டமாக அமையும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *