‘நீட்’ முறைகேட்டின் முக்கியப் புள்ளியான சஞ்சய் முக்யா மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்?

2 Min Read

புதுடில்லி, ஜூலை 25 நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ள நிலையில், இந்த முறைகேடுகளின் பின்னணியில் இருக்கும் மிக முக்கியமான நபரான சஞ்சய் முக்யா மீது இதுவரை எந்தவொரு தீவிர நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வழக்கில் உருவான திருப்பமும்– பின்னணியும்!

கடந்த 2022-ஆம் ஆண்டு நீட் தேர்வு முறைகேடு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட முக்கியக் குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தியபோது, சஞ்சய் முக்யாவின் பெயர் முதன்முதலாகப் பலமாக அடிபட்டது.

‘நீட்’ முறைகேடு தொடர்பான சர்ச்சை களில் மிக முக்கியமான நபரான இவர், இது குறித்துப் பல்வேறு முன்னணி ஊடகங்க ளிலும் நேர்காணல்கள் அளித்துள்ளார்.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணை களின் அடிப்படையில், 2025-ஆம் ஆண்டு நேரடியாகவே முறைகேட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டு, இவர் அதிகாரப்பூர்வமாகக் குற்றவாளிகள் பட்டி யலில் சேர்க்கப்பட்டார்.

குற்றப்பத்திரிகையும்– விசாரணை அமைப்புகளின் தாமதமும்!

குற்றவாளிகள் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டு நீண்ட நாட்களாகியும், இன்று வரை இவர் மீது குற்றப்பத்திரிகை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை.

சஞ்சய் முக்யாவைக் கைது செய்து தீவிர விசாரணைக்கு உட்படுத்தினால், இவருக்குப் பின்னால் மறைந்திருக்கும் சக்திவாய்ந்த பெரிய புள்ளிகள் யாரென்பதும், அதிகார வர்க்கத்தின் முகத்திரையும் கிழிந்துவிடும் என்பதால், விசாரணை அமைப்புகள் இவர் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கி வரு கின்றன.

தொடரும் ஆபத்து

சஞ்சய் முக்யா சுதந்திரமாக உலா வரும் வரை நீட் தேர்வில் நடக்கும் ஆள்மாறாட்டம் மற்றும் முறைகேடுகளை முழுமையாகத் தடுக்க முடியாது என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவர்களின் கருத்தாக உள்ளது. நீட் தேர்வின் நம்பகத் தன்மையைக் காப்பாற்ற, விசாரணை அமைப்புகள் எவ்வி தத் தயக்கமுமின்றி உடனடியாக இவரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

ஆனால், கடந்த ஜூலை 23 அன்று, இவர்மீது எந்தக் குற்றச்சாட்டுக்கும் சாட்சிகள், சான்றுகள் இல்லை என்று கூறி, சி.பி.அய். ‘கிளீன் சிட்’ கொடுத்துள்ளதாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *