மாவட்ட அளவிலான பால்பேட்மின்டன் போட்டியில் பெரியார் நூற்றாண்டு நினைவு பள்ளி மாணவிகள் மூன்றாம் இடம் பிடித்து சாதனை!

1 Min Read
- Advertisement -

திருச்சி, அக்.17- திருச்சி ,பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், விளை யாட்டுத் துறையில் தொடர்ந்து பல சாதனைகளைப் படைத்து வருகின்றனர். அந்த வகையில், அண்மையில் நடைபெற்ற வருவாய் மாவட்ட அளவிலான பால்பேட்மின்டன் (Ball Badminton) போட்டிகளில் இப்பள்ளி மாணவிகள் சிறப்பான திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.

இப்போட்டியில்  மாணவிகள் ஆர்.தியா, எஸ்.சிறீ பிரவர்ஷினி, டி.ரிதன்யாசிறீ, டி.பி.நிகித பாலா, பி.மித்ரோனா யாழிசை, தீக்ஷா, பி.பூஷிதாசிறீ, எம்.கனிஷ்கா, வி.யாழினி மற்றும் எம்.ஹர்ஷிதா ஆகியோர் கலந்துகொண்டு தீவிரமாக விளையாடினர்.

கடுமையான போட்டிகளை எதிர்கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பள்ளி மாணவிகள், வருவாய் மாவட்ட அளவில் மூன்றாம் இடத்தைப் பிடித்து பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவிகளை யும், அவர்களுக்கு முறையான பயிற்சி அளித்து ஊக்கப்படுத்திய உடற்கல்வி ஆசிரியர்கள்  கோகுல் மற்றும்  சவும்யா ஆகியோரையும் பள்ளித் தாளாளர், முதல்வர்,  மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *