திருச்சி, அக்.17- திருச்சி ,பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், விளை யாட்டுத் துறையில் தொடர்ந்து பல சாதனைகளைப் படைத்து வருகின்றனர். அந்த வகையில், அண்மையில் நடைபெற்ற வருவாய் மாவட்ட அளவிலான பால்பேட்மின்டன் (Ball Badminton) போட்டிகளில் இப்பள்ளி மாணவிகள் சிறப்பான திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.
இப்போட்டியில் மாணவிகள் ஆர்.தியா, எஸ்.சிறீ பிரவர்ஷினி, டி.ரிதன்யாசிறீ, டி.பி.நிகித பாலா, பி.மித்ரோனா யாழிசை, தீக்ஷா, பி.பூஷிதாசிறீ, எம்.கனிஷ்கா, வி.யாழினி மற்றும் எம்.ஹர்ஷிதா ஆகியோர் கலந்துகொண்டு தீவிரமாக விளையாடினர்.
கடுமையான போட்டிகளை எதிர்கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பள்ளி மாணவிகள், வருவாய் மாவட்ட அளவில் மூன்றாம் இடத்தைப் பிடித்து பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவிகளை யும், அவர்களுக்கு முறையான பயிற்சி அளித்து ஊக்கப்படுத்திய உடற்கல்வி ஆசிரியர்கள் கோகுல் மற்றும் சவும்யா ஆகியோரையும் பள்ளித் தாளாளர், முதல்வர், மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
