பொம்மிடி, அக். 15- அரூர் மாவட்ட திராவிட மாணவர் கழகமும், திமுக மாணவரணியும் இணைந்து தந்தை பெரியார் 148 ஆம் ஆண்டு, அறிஞர் அண்ணா அவர்களின் 118ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா சிறப்புக் கருத்தரங்கம் 11.10.2026ஆம் தேதி காலை 11 மணியளவில் பாப்பி ரெட்டிப்பட்டி ஒன்றியம் பொம்மிடி சமுதாய கூடத்தில் நடைபெற்றது.
அரங்கத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, அண்ணல் அம்பேத்கர், முத்தமிழ் அறிஞர் கலைஞர், ஆகியோர் படத்திற்கு நிகழ்ச்சிக்குத் தலைமையேற்ற மாவட்ட திமுக செயலாளரும், மேனாள் அமைச்சருமான பி. பழனியப்பன் மற்றும் திமுக நிர்வாகிகள், திராவிடர் கழக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மாவட்ட திமுக மாணவர் அணி துணைச் செயலாளர் சதா.சுர்ஜித் அனைவரையும் வரவேற்று தொடக்க உரையாற்றுகையில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியடைந்து கழகத் தோழர்கள் எல்லாம் சோர்ந்து உற்சாகம் இழந்திருந்த நிலையில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 120 இடங்களில் பொதுக் கூட்டங்களை நடத்த அறிவித்து அதன்படி 120 பொதுக் கூட்டங்களை நடத்திய திராவிடர் கழக தோழர்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என அறிவித்தபோது அரங்கத்தில் கை ஒலிஎழுப்பி ஆரவாரம் செய்தனர்.
பொ. மல்லாபுரம் பேரூர் திமுக செயலாளர் கு.கவுதமன், பேரூராட்சி தலைவர் சாந்தி புஷ்பராஜ், நிர்வாகிகள் ரா. கோகுல், பூ.மதன்குமார், திமுக மாணவர் அணி பொறுப்பாளர்கள் சாந்தா, பிரபு, புனிதா, மாவட்ட கழக இளைஞரணி தலைவர் பு.வினோத்குமார், திராவிட மாணவர் கழகத் தலைவர் சாய்குமார், மாவட்டத் தலைவர் அ.தமிழ்செல்வன், மாவட்ட செயலாளர் கு.தங்கராஜ், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அரூர் சா.இராஜேந்திரன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மா.செல்லதுரை, மாவட்ட பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் இரா.கோகுல், மாவட்ட மேனாள் தலைவர் வீ.சிவாஜி, ஒன்றியத் தலைவர் பொன். அய்யனார், மாவட்ட இளைஞரணித் தலைவர் சஞ்சீவன், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் சூர்யா, ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.த.மு. யாழ்திலீபன் அறிமுக உரையாற்றி ஒருங்கிணைந்து நடத்தினார்.
திமுக மாநில மாணவர் அணி துணை செயலாளர் இரா.தமிழரசன், மாநில பகுத்தறிவு கலைத்துறைச் செயலாளர் மாரி. கருணாநிதி ஆகியோர் கருத்துரையாற்றினர். மாவட்ட திமுக செயலாளர்,மேனாள் அமைச்சருமான பி.பழனியப்பன் சிறப்புரையைத் தொடர்ந்து கழக சொற்பொழிவாளர் தஞ்சை இரா. பெரியார்செல்வன் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், பச்சைத் தமிழர் காமராசர், ஆசிரியர் கி.வீரமணி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஆற்றிய தொண்டையும், பணியையும் நினைவு கூறி எழுச்சியுரையாற்றினார்.
நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் கே.மனோகரன், கோ.ரமேஷ், சூடப்பட்டி சுப்பிரமணி, ஜி.எல் வெங்கடாசலம், மோகன், சிவப்பிரகாசம், செங்கல்மாரி, ஜெயச்சந்திரன், கோ. குபேந்திரன், பெ.அன்பழகன், பு.மதன்குமார், மா.கவுதம் குமார், கழக நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர்கள் வே.தமிழ்ச்செல்வன், அ. இளங்கோ, திமுக சொ.பாண்டியன், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் வ. நட ராஜன், தர்மபுரி மாவட்ட பகுத்தறி வாளர் கழகத் தலைவர் கதிர் செந்தில், தருமபுரி பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் இர.கிருஷ்ணமூர்த்தி, கடத்தூர் ஒன்றியச் செயலாளர் பச்சையப்பன், பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் பிரதாப், மகளிர் அணி முருகம்மாள் கலா சுசீலா, இளைஞரணி சபரி, கபில், பார்த்தசாரதி கடத்தூர் நகரத் தலைவர் நெடுமிடல், தருமபுரி விடுதலை வாசகர் வட்ட செயலாளர் ம.சுதா, மாவட்ட பகுத்தறிவு கலைத்துறைச் செயலாளர் கீரை பிரபாகரன், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் கல்பனா, மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் சுடரொளி, வேப்பிலைப்பட்டி கணேசன், த.தமிழழகன் தீ.அமுல்செல்வம், ச.சித்தார்த்தன் ச.வீரச்செல்வி என்கின்ற யாழமுதினி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திராவிடர் கழகம் திமுக தோழர்கள் என 300 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திராவிடர் கழகக் கொடியும், திராவிட முன்னேற்றக் கழகக் கொடியும் இணைத்து கட்டப்பட்டி ருந்தன. பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியிடுகள் ரூபாய் 2,170க்கு விற்பனையானது. நிறைவாக திமுக மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்
கே.சி.ஆர். தங்கராஜ் நன்றி கூறினார்.
