கும்பகோணம், அக். 6– மேலக் காவேரியில் “வாசிப்பை நேசிப் போம்” சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இளைய தலைமுறை மாணவ மாணவிகளுக்கு வாசிப்புப் பழக்கத்தை அதிகப்படுத்துகிற உற்சாகப்படுத்துகிற வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, கவிஞர் மு.அய்யூப்கான் தலைமை தாங்கினார்.சொல்லாய்வு செம்மல் மூத்த தமிழறிஞர் வய்.மு.கும்பலிங்கன், மாமன்ற உறுப்பினர் கவிஞர் ச.அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தாங்கள் படித்த புத்தகத்திலிருந்து மாணவ மாணவிகள் பல்வேறு தகவல்களை வழங்கினார்கள்.
கவிஞர் செறுகுடி செந்தில், நூலாசிரியர் நாகராஜன், ஓய்வு பெற்ற நூலகர் ராஜாங்கம், குடந்தை குருதிக்கொடை டிரஸ்ட் அறங்காவலர் சுலைமான் சேட், ஆசிரியர் பன்னீர்செல்வம், அரங்க வைரமுடி, ராஜேந்திரன் உட்பட பலர் வாழ்த்திப் பேசினார்கள்.
ஜோதிமலை இறைப்பணி திருக் கூட்டம் நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள் சிறப்புரையாற்றினார். புத்தகங்களை வாசித்து கருத்துக்களை வழங்கிய மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கவிஞர் மு.அய்யூப்கான் செய்திருந் தார். மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் நிகழ்ச்சியில் பங்கேற்றுச் சிறப்பித்தார்கள்.
