கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 12.10.2026

2 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* டில்லியில் இருந்து உச்சநீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணித் தலைவர்கள் பேரணி! தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி விலகக் கோரி, ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி, உச்சநீதிமன்றத்தை அணுகப் போவதாக அறிவித்துள்ளனர்.

* டில்லியில் ‘அவசரநிலையைப் போன்ற சூழல்’ – பத்திரிகையாளர்கள் கைது! தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டதற்கு ஊடக அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன; போராட்டம் நாடு முழுவதும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* டில்லியில் போராட்டம் தொடரும்: தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக ‘ஜந்தர் மந்தர் 2.0’ போராட்டம்! தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. ஜான் பிரிட்டாஸ் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு.

* போராடும் உரிமையைப் பாதுகாத்த உச்சநீதிமன்றம் – பத்திரிகையாளர்கள் கைது; காவல்துறைக்கு கண்டனம்! அமைதியான போராட்டத்தில் ஈடுபடுவோரை கைது செய்யக் கூடாது என்றும், பத்திரிகையாளர்கள் தங்கள் பணியைச் செய்ய தலையிடக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், டில்லியில் பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் தடுத்து வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ஆந்திர அமைச்சரவை: பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு இறுதி செய்யப்பட்டது! ஆர்.ஆர். மிஸ்ரா குழு அறிக்கையின் அடிப்படையில், உள்ளாட்சிகளில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு 23.08% முதல் 27.95% வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது; மொத்த இடஒதுக்கீடு 50% உச்சவரம்புக்குள் வைக்கப்பட்டுள்ளது என ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

தி இந்து:

* சட்டவிரோதக் கைதுகளை நிறுத்துக – உச்சநீதிமன்றம் உத்தரவு! டெல்லியில் போராட்டக்காரர்கள் மீதான காவல்துறை நடவடிக்கைகளுக்கு மத்தியில், சட்டம் மற்றும் பொது ஒழுங்குக்கு உட்பட்டு மக்கள் சுதந்திரமாக செல்ல மத்திய அரசும் டில்லி காவல்துறையும் உறுதி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தி டெலிகிராப்:

* போராட்டக்காரர்கள் மீது வன்முறை: ஹிந்து ரக்ஷா தளம் பொறுப்பேற்பு; பத்திரிகையாளர்கள், எம்.பி.க்கள் தடுத்து வைப்பு! டில்லியில் காவி உடை அணிந்தவர்கள் போராட்டக்காரர்களை தாக்கும் காணொலிகள் பரவிய நிலையில், தாக்குதல்களுக்கு தாங்களே பொறுப்பு என ஹிந்து ரக்ஷா தளம் கூறியுள்ளது; காவல்துறையின் நடவடிக்கைகள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளன.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *