டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கல்வியை ஒழுங்குபடுத்துவது குறித்து ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்: பள்ளிகளில் வழங்கப்படும் மதச்சார்பற்ற அல்லது மதக் கல்வியைப் பதிவு செய்து, கண்காணித்து ஒழுங்குபடுத்தவும், குழந்தைகளின் அரசியலமைப்புச் உரிமைகளைப் பாதுகாக்கவும் கோரிய மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஒன்றிய அரசின் பதிலை நான்கு வாரங்களில் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* யு.பி.அய். (UPI) பரிவர்த்தனைக்கு புதிய சேவைக் கட்டணம்: அக்டோபர் 15 முதல் ₹2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% வணிகரிடம் வசூலிக்கப்படும் சேவைக் கட்டணம் (MDR), அதிகபட்சம் ₹300 வரை வசூலிக்கப்படும். ₹2,000 வரை மற்றும் தனிநபர்-தனிநபர் (P2P) பரிவர்த்தனைகள் இலவசமாகத் தொடரும்; நுகர்வோரிடம் யு.பி.அய். கியூ ஆர் மூலம் பணம் செலுத்துவதற்கு கட்டணம் இல்லை.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* மதம் மாறியவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் குழு பரிந்துரைக்க வாய்ப்பில்லை: இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களுக்கு மாறிய தாழ்த்தப்பட்டோரை எஸ்.சி. பட்டியலில் சேர்க்காமல், 1950ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் உத்தரவின்படி தற்போதைய நிலையே தொடர வேண்டும் என சிறப்புக் குழு அரசுக்கு பரிந்துரைக்கலாம் என தகவல்.
– குடந்தை கருணா
