தந்தை பெரியார் பிறந்த நாளினை முன்னிட்டு நீடாமங்கலம் பெரியார் நடை

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

நீடாமங்கலம், அக். 10- தந்தை பெரியார் 148 ஆம் ஆண்டு பிறந்த நாளினை முன்னிட்டு 20.9.2026 அன்று காலை 6.30 மணிக்கு மன்னார்குடி கழக மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியத்தில் பெரியார் நடை மிகுந்த உற்சாகத்தோடு நடைபெற்றது.

நீடாமங்கலம் அறிஞர் அண்ணா சிலையின் அருகே தொடங்கிய நடைபயணம் முக்கிய கடைவீதிகளின் வழியாக  சுமார் 3 கிலோமீட்டர் தூரம் பயணித்து தந்தை பெரியார் கொள்கைகளை முழக்க மிட்டுக் கொண்டு  நீடாமங்கலம் தந்தைபெரியார் சிலையின் அருகே முடிவுற்றது.

திராவிடர் கழக மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த் தன் தலைமை வகித்தார். இந்நிகழ்வை தொடங்கி வைத்து மேனாள் ஒன்றிய பெருந்தலைவர் சோம.செந்தமிழ்ச்செல்வன், காங்கிரஸ் கட்சி மாவட்டத்தலைவர் நீலன்.அசோகன், அண்ணா திராவிட முன்னேற்ற கழக அம்மா பேரவை மாவட்ட செயலாளர் எஸ்.செந்தமிழ்ச் செல்வன்,  விடுதலை சிறுத் தைகள் கட்சி மாவட்ட துணை செயலாளர் புதியவன், இந்திய பொதுவுடமைக் கட்சி விவசாய அணி ஒன்றிய செய லாளர் கு.இராதா.மார்க்சிய பொதுவுடமைக் கட்சி ஒன்றிய செயலாளர் ஜான் கென்னடி, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட செயலாளர் சு.அம்பிகாபதி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் கந்தசாமி, நிகழ்வை தொடங்கி வைத்து உரையாற்றினார்கள். நிகழ்ச்சியில் மாவட்ட கழகச் செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, திராவிடர்கழக பொதுக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்..அன்பழகன், மாநில இளைஞரணி துணை செயலாளர். அ.ஜெ.உமாநாந், திராவிடர் கழக பேச்சாளர்கள் இராம.அன்பழகன், கு.சிங்காரவேலு பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் வை.கவுதமன், மாவட்ட செயலாளர் தங்க வீரமணி, ப.க.பொறுப்பாளர் நா.உ.கல்யாணசுந்தரம்.மாவட்ட கழகத் துணைத் தலைவர் இன்பக்கடல். மாவட்ட துணைச் செயலாளர் வீ.புட்பநாதன்,திராவிடர்கழக மன்னார்குடி ஒன்றிய தலைவர் மு.தமிழ்செல்வன், நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் சதா.அய்யப்பன் நீடாமங்கலம் நகர தலைவர் கி.இராஜேந்திரன், நீடா மங்கலம் நகர செயலாளர் இரா.அய்யப்பன் பகுத்தறிவாளர் கழக நகர செயலாளர் வா.சரவணன், பகுத்தறிவாளர்கழக ஒன்றிய தலைவர் நா.ரவிச்சந்திரன் ஒன்றிய செயலாளர் கா முரளி. கோட்டூர் ஒன்றிய தலைவர் எம்.பி.குமார் . மன்னார்குடி சிவா.வணங்காமுடி, பகுத்தறி வாளர் கழக மாவட்ட அமைப்பாளர் இரா.கோபால். அண்ணா திராவிட முன்னேற்ற கழக நகர செயலாளர் இ.ஷாஜகான்,வடுவூர் உலகநாதன், ஆசையொளி, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி நகர செயலாளர் கோவிந்த ராஜ், நீடா.பத்மநாதன், ரஹ்மத்துல்லாஹ், ஆதித்யன்,  விடுதலை சிறுத்தைகள்  ஒன்றிய பொறுப்பாளர் சத்யராஜ், நகர செயலாளர் செலவ.மாலினி,   திராவிடர் கழக மாணவர் அணித் தோழர்கள் கோவில் வெண்ணி. ஜெய்கிருஷ்ணா மோகன்பாலா, ஜெகதீஸ்வரன், நவீன், வாசுதேவமங்கலம் ஆகாஷ், முன்னாவல்கோட்டை கவிப்பிரியன், ஆதனூர் லோகேஸ்வரன், ஜீவானந்தம், சோத்திரை, தீபக், ஜீவன்ராஜ்,  அய்யம்பேட்டை. கெவின், பெரியகோட்டை கார்த்திக், பிரகாஷ், இளமுகில்,இளமுதன். சுதன்,

கோவில் வெண்ணி தமிழ்ப் படிப்பக பொறுப்பாளர் சுதாகர், திலீபன் பெரியார் பிஞ்சுகள் தமிழினி, ஆதிரை, ஆதனூர் ராகேஷ் மற்றும் ஏராளமான மாணவர்களும் இளைஞர்களும் நிகழ்வில் பங் கேற்று சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வை மாநில பகுத் தறிவாளர் கழக அமைப்பாளர் சி.இரமேஷ் ஒருங்கிணைத்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *