ஜெய்ப்பூர், அக். 6 தேர்தல் ஆணை யத்தின் செயல்பாடுகள் மற்றும் வாக்குத் திருட்டு விவகாரங்கள் குறித்து காங்கிரஸ் மூத்த தலை வரும், ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சருமான அசோக் கெலாட் எழுப்பிய கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
ஜெய்ப்பூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அசோக் கெலாட் பேசியதாவது:
தேர்தல் ஆணையத்தின் நடை முறைகள் மற்றும் எஸ்அய்ஆர் விவ காரங்கள் தொடர்பாக தற்போதைய சர்ச்சைகள் வெடிப்பதற்குப் பல மாதங்களுக்கு முன்பே, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வாக்குத் திருட்டு விவகாரத்தை வெளிப்படையாக எழுப்பினார். கடந்த ஆண்டு முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் உடல்நலக் காரணங்களைக் கூறி, திடீரென தனது பதவியிலிருந்து விலகினார்.
குடியரசுத் துணைத் தலைவர் போன்ற ஒரு உயர் பதவியில் உள்ளவரே திடீரென பதவி விலக முடியுமென்றால், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரால் ஏன் பதவி விலக முடியாது?
இந்த விவகாரத்தில் குறைந்த பட்சம் ஒரு அத்தியாயமாவது முடிவுக்கு வந்து, நாட்டில் ஜனநாயக ரீதியான ஒரு புதிய தொடக்கம் அமைய வேண்டும் என்று அசோக் கெலாட் வலியுறுத்தினார்.
