ஓமன் அருகே எண்ணெய்க் கப்பல் மீது அமெரிக்க போர் விமானம் தாக்குதல்: இந்திய மாலுமிகள் 3 பேர் உயிரிழப்பு

புதுடில்லி, ஜூன் 12- ஓமன் கடலோரப் பகுதியில் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க போர் விமானம் நடத்திய தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர். இதற்கு இந்தியா கண்டனம் தெரி வித்துள்ளது.

போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா- ஈரான் இடையேயான பேச்சுவார்த்தை இழு பறியில் உள்ள நிலையில் ஹார்முஸ் நீரிணையை அமெரிக்கப்படை முற்றுகையிட்டுள்ளது.

ஈரான் துறைமுகங் களை நோக்கி கப்பல்கள் செல்வதையும், ஈரான் துறைமுகங்களில் இருந்து கப்பல்கள் வெளியேறுவதையும் அமெரிக்கப்படை தடுத்து, ஈரான் வருவாயை முடக்கி போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில் பசிபிக் கடல் பகுதியில் உள்ள தீவு நாடான பாலாவ்கொடி பொருத்தப்பட்ட ‘செட்டெபெல்லோ’ என்ற எண்ணெய்க் கப்பல் ஹார்முஸ் நீரி ணையை கடந்து ஈரான் துறைமுகத்துக்கு நுழைய முயன்றது. இதில் உள்ள 28 மாலுமிகளில் 24 பேர் இந்தியர்கள். இந்த கப்பலுக்கு பிறப்பித்த அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் ஹார்முஸ் நீரிணை பகுதியை கடக்க முயன்றதாக அமெரிக்க ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.

இதையடுத்து இந்த கப்பலின் இன்ஜின் அறை மீது அமெரிக்க போர் விமானம் குண்டு வீசி முடக்கியது. இதில் இந்திய மாலுமிகள் ஆதித்ய சர்மா, சிவானந்த் சவுரேஷியா, தலைமை பொறியாளர் பட்னாலா சுரேஷ் ஆகியோர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் இந்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்வானந்த சோனோவால் கூறுகையில், ‘‘செட்டோபெல்லோ என்ற எண்ணெய் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய மாலுமிகள் 3 பேர் உயிரிழந்தது வாய்ப்புக் கேடானது.

இந்த துயரமான நேரத்தில் உயிரிழந்த மாலுமிகளின் குடும்பத் துக்கு அரசு துணை நிற்கிறது. மீட்கப்பட்ட இந்திய மாலுமிகள் உடனடியாக நாடு திரும்புவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்த மாலுமிகளின் உடல்கள் இறுதி நிகழ்வு களுக்காக உடனடியாக இந்தியா கொண்டு வரப் படும்’’ என்றார்.

இந்தியா கண்டனம்

ஹார்முஸ் நீரிணை பகுதியில் கப்பல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் மிகுந்த கவலையளிப்பதாக குறிப்பிட்டுள்ள இந்தியா, இப்பகுதியில் போர்ப் பதற்றம் உடனடியாக குறைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. மேலும், டில்லியில் உள்ள அமெரிக்கதூதரை அழைத்து, இந்திய மாலுமி கள் மீதான தாக்குதலுக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்தது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *