புதுடில்லி, அக்.6- உச்சநீதிமன்றத் திற்கு 3 புதிய நீதிபதிகள் நேற்று (5.10.2026) நியமிக்கப்பட்டனா். இதையடுத்து, உச்சநீதிமன்ற நீதி பதிகள் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்தது.
குஜராத் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சுனிதா, டில்லி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாய, தெலங்கானா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி அபரேஷ் குமார் சிங் ஆகியோரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி பரிந்துரைத்தது.
இந்நிலையில், அவர்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் நேற்று (5.10.2026) அறிவித்தார். உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கை தலைமை நீதி பதியையும் சேர்த்து 38 ஆகும். இப்போதைய 3 புதிய நியம னங்கள் மூலம் மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 37 ஆக உயா்ந்துள்ளது.
மூன்றாவது
பெண் நீதிபதி சுனிதா
அதே நேரத்தில் பெண் நீதி பதிகள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே பெண் நீதிபதி பி.வி.நாகரத்னா, கடந்த 2021 முதல் உச்சநீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறார். நீதிபதி வி.மோகனா, கடந்த ஜூன் மாதம் பதவியேற்றார். இப்போதைய 3 புதிய நீதிபதிகள் நியமனம் மூலம் சுனிதா, மூன்றாவது பெண் நீதிபதி யாக இடம் பெறுகிறார்.
பணிமூப்பு அடிப்படையில் அடுத்த ஆண்டு செப்டம்பரில் தலைமை நீதிபதியாக பி.வி.நாக ரத்னா பதவியேற்பார். இதன்மூலம் நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதி என்ற பெருமை அவருக்கு கிடைக்கும். அவா் சுமார் ஒரு மாத காலம் அப்பதவியில் இருப்பார். 2027 அக்டோபர் இறுதியில் அவர் ஓய்வு பெறுவார்.
