தஞ்சாவூர், செப்.30- பெரியார் 148வது பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தின் ஒரு நிகழ்வாக பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கில் தேசிய அளவிலான பெரியார் தொழில் நுட்பக் கருத்தரங்கு 03.09.2026 அன்று காலை 10.00 மணியளவில் இக்கல்லூரியில் இணைய வழியாக நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் பல்வேறு பாலிடெக்னிக்களி லிருந்தும் சுமார் 150 மாணவர்கள் கலந்து கொண்டு தயாரித்து அனுப்பிய 80 கட்டுரைகள் வாசிக்கப் பட்டன.
மாணவ, மாணவிகளின் பரிசளிப்பு விழாவில் தலைமையுரை யாற்றிய இக்கல்லூரி முதல்வர் க.ப.வெள்ளியங்கிரி இந்த கருத்தரங்கு மாணவர்களின் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் மற்றும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியைப் பகிரிந்து கொள்ளவும் மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது என்று கூறினார்.
பின்பு வாழ்த்துரை வழங்கிய இக்கல்லூரி துணை முதல்வர் முனைவர் க.ரோஜா பரிசு பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டதோடு இது போன்ற கருத்தரங்குகளில் அதிக அளவில் மாணவர்கள் பங்கேற்று திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பான முறையில் கட்டுரை வாசித்தளித்த மாணவர்கள் முறையே முதல் மற்றும் இரண்டாம் பரிசுகள் ரூ. 1500 மற்றும் ரூ. 1000 ஆகிய பணப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மேலும் பரிசுகள் வென்ற அனைத்து மாணவ, மாணவி களுக்கும் கல்லூரியின் சார்பில் பாராட்டுகளும், வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டன.
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான பெரியார் தொழில்நுட்பக் கருத்தரங்கு 2026
Leave a Comment
