பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்கள் பாஸ்டியர் பொது சுகாதாரம் மற்றும் தடுப்பூசி ஆராய்ச்சி மய்யத்தினைப் பார்வையிட்டனர்

திருச்சி, ஜூலை 9-  திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியின் பயிற்சி மற்றும் பணியமர்த்தும் பிரிவின் மூலம் பெரியார் மருந் தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை தலைமையில் பேராசிரியர்கள், நான்காமாண்டு இளநிலை மருந்தியல் மாணவர்கள் மற்றும் மருத்துவ ஆய்வுக்கூட தொழில் நுட்பத்துறை மாணவர்கள் 40 பேர் நீலகிரி மாவட்டம் குன்னூரில் அமைந்துள்ள பாஸ்டியர் சுகாதாரம் மற்றும் தடுப்பூசி மய்யத்தினை (Pasteur Institute of India) 03.07.2026 அன்று பார்வையிட்டனர்.

பல்வேறு தடுப்பூசி மருந்து தயாரிப்பின் முன்னோடி ஆராய்ச்சி நிறுவனமாகத் திகழும் பாஸ்டியர் நிறுவனத்தில் வெறிநாய்க்கடிக்கான தடுப்பூசி (Antirabies Vaccine), TT தடுப்பூசி (Tetanus Toxoid Vaccine), DT தடுப்பூசி (Diphtheria – Tetanus Vaccine), DPT தடுப்பூசி (Diphtheria – Pertussis – Tetanus Vaccine) தடுப்பூசிகளின் வரலாறு, தயாரிப்பு மற்றும் ஆராய்ச்சி முறைகள் குறித்து பேராசிரியர் களும் மாணவர்களும் காணொலி காட்சி மூலம் விளக்கம் பெற்றனர்.

மேலும் அதன் இயக்குநர் மருத்துவர் எஸ்.சிவக்குமார், முதல்வர் மற்றும் பேராசிரியர் களிடம் நிறுவனத்தின் பல்வேறு செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தார். முன்னதாக பெரியார் மருந்தியல் கல்லூரியின் சார்பில் மருத்துவர் எஸ்.சிவக்குமாருக்கு முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை புத்தகங்களை வழங்கி சிறப்பித்தார்.

இரண்டாம் நாள் 04.07.2026 அன்று உதகையிலுள்ள கருநாடகா தாவரவியல் பூங்காவினை பார்வையிட்டதோடு தேநீர் மற்றும் சாக்லேட் தயாரிப்பு நிறுவனத்தை பார்வையிட்டனர். தேயிலையிலிருந்து டீத்தூள் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதன் பல்வேறு படிநிலை களை மாணவர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். மேலும் சாக்லேட் தயாரிப்பு முறைகளை அறிந்து கொண்டனர்.

தயாரிப்பில் துவங்கி தர மேலாண்மை மற்றும் சந்தைப் படுத்துதல் உட்பட அனைத்து முறைகளையும் அறிந்து கொண்டனர். கல்வி சுற்றுலாவின் இரண்டு நாட்களும் பெரியார் மருத்துவக் குழுமத்தின் இயக்குநர் மருத்துவர் இரா.கவுதமன் அனைவரும் தங்குவதற்கு இட வசதிகளையும் அறுசுவை உணவிற்கும் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார்கள்.

அதுமட்டுமல்லாமல் அவரது இல்லத்தில் மாணவர்களுடன் இணைந்து பகுத்தறிவு சார்ந்த பல கருத்துகளையும் கலந்துரை யாடினார்கள். மாணவர்களை மூலிகை மருந்தியல் துறைத் தலைவர் முனைவர் ஷகிலா பானு, பயிற்சி மற்றும் பணியமர்த்தும் பிரிவின் இயக்குநர் பேராசிரியர் ச. இராஜேஷ், துணை இயக்குநர் முனைவர் விஜயலெட்சுமி, பேராசிரியர்கள் பிரகதி, ரேது ராஜா, திரிஷ்யா, பணித்தோழர் தனபால் மற்றும் ஒளிப்பட கலைஞர் பாண்டியன் ஆகியோர் சிறப்பாக வழிநடத்தினர்.

இரண்டு நாட்களும் மிகவும் பயனுள்ளதாகவும் மனதிற்கு மகிழ்ச்சியை வழங்கிய சுற்றுலா தலங்களும் மறக்கமுடியாத அனுபவங்களை வழங்கிய மருத்துவர் கவுதமனின் அன்பான உபசரிப்புகளையும் என்றும் நினைவில் நீங்காதவை என்று மாணவர்கள் பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இத்தகைய பெரும் வாய்ப்பை வழங்கிய பெரியார் மருந்தியல் கல்லூரியின் நிர்வாகத்திற்கும், முதல்வர், பயிற்சி மற்றும் பணிய மர்த்தும் பிரிவிற்கும் தங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொண் டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *